வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள்.



இது புது மாதிரி ஆனால் நமது நினைவாற்றலுக்கு வேலைதரும் விளையாட்டு.இதில் மொத்தம் 20 விலங்கினங்கள் உள்ளது. ஒவ்வோரு கட்டத்திலும் ஒவ்வோரு விலங்கினங்கள் இருக்கும். இந்த விளையாட்டை ஆரம்பிக்கும் முன் நமக்கு ஒரு நிமிடம் படங்கள் தெரியும். பின்னர் படங்கள் மறைந்துவிடும். நாம் எந்த எந்த கட்டத்தில் எந்த விலங்கு உள்ளது என்று கண்டுபிடிக்கவேண்டும். நாம் குறைந்த வினாடிகளில் கண்டுபிடித்துவிட்டால் பாயிண்ட் கிடைக்கும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இது சின்ன சாப்ட் வேர் தான் இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
சரி ...நமக்கு விலங்குகள் வேண்டாம். நாம் நமது குடும்ப உறுப்பினர்கள் படங்களை சேர்க்கலாம். அதற்கு என்ன செய்யலாம்.Image கிளிக் செய்து அதில் வரும் Manage image கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் உள்ள + குறியை அழுத்துங்கள். கீழே ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் Image File உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்து ஒ.கே. கொடுங்கள். ஒரு நிமிடம்...உங்கள் கணிணியில் உள்ள புகைப்படத்தை அப்படியே இது எற்றுக் கொள்ளாது. எனவே உங்கள் புகைப்படத்தை 41 X 41 பிக்ஸல் சைஸ்க்கு கொண்டுவந்து அதை .bmp பைலாக மாற்றிக்கொள்ளுங்கள்.குறைந்தது 15 புகைப்படங்களை சேர்க்கவேண்டும்.எல்லாம் முடிந்ததும் ஓ.கே.கொடுங்கள்.இப்போது நீங்கள் கேமை கிளிக்செய்தால் நீங்கள் தேர்வு செய்த படங்கள் வந்து மறைந்துவிடும். பின்னர் ஒவ்வொருகட்டத்திலும் உங்கள் புகைப்படங்கள் தேடி கிளிக் செய்யவேண்டும். இரண்டு படங்கள் ஒரே சமயத்தில் தேர்வானால் படம் மறைந்துவிடும். உங்களுக்கு ஒரு பாயிண்ட் கிடைக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள விளையாட்டு.அவர்களின் வெவ்வெறு கால புகைப்படங்களை இதில் நுழைத்து அவர்களை விளையாட சொல்லலாம்.நான் நம் சக பதிவர்களின் புகைப்படங்களை இங்கு தொகுத்துள்ளேன்.ஒவ்வோரு முறையும் கேமை திறக்கும் சமயம் அவர்கள் இடம் மாறிமாறி வருவதை கவனியுங்கள்.
இரண்டாம் முறை திறந்த சமயம் வந்த புகைப்படம் கீழே:-
மூன்றாம் முறை திறந்த சமயம வந்த புகைப்படம் கீழே:-

சக பதிவர்களின புகைப்படத்தை நிரப்பியுள்ள இந்த கேமை பதிவிறக்க 
இங்கு கிளிக் செய்யவும்.
பதிவினை பாருங்கள் கருத்தினை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்:
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
பிடித்த ஆண்இனத்தில் நமது கிளிகள் இனம் புகைப்படம வரலையே ...என்ன செய்யலாம்?
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...