வேலன்-தஞ்சாவுர் அறிய புகைப்படங்கள்.

நாளை மன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் 1000 ஆவது ஆண்டு விழா தஞசாவுரில் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் என்னிடம் உள்ள தஞ்சாவுர் பற்றிய புகைப்படங்களை உங்களுட்ன் பகிர்நது கொள்வதில் பெருமை அடைகின்றேன். புகைப்படங்கள் கீழே-
கோயிலின் கம்பீர முன்புற தோற்றம்.
கம்பீர பக்கவாட்டு தோற்றம்.-
கோயிலின் கோபுரத்தில் உள்ள ஆங்கிலேயர் உருவம்-
இரவில் கோயிலின் தோற்றம்-
விளக்கொளியில் மின்னும் கோபுரம்-
கோபுரத்தின் உட்புற தோற்றம். வியக்க வைக்கும் கட்டமைப்பு. பார்த்து்க்கொண்டே இருக்கலாம் என தோன்றுகி்ன்றது.இதன் மேல்தான் 80 டன் கல் உள்ளது என்றால் ஆச்சர்யமாக -வியப்பாக உள்ளது அல்லவா? 
நாட்டிய கலை 108 -ஐ சிற்பமாக வடித்துள்ளார்கள்.இங்கு 80 கலைகளே உள்ளது. போர் காரணமாகவோ - அல்லது வேறு என்ன காரணமோ தெரியவில்லை...சிற்பம் வடிக்காமல் கல் மட்டும் உள்ளது. 
உட்புறம் காலத்தால் அழியாக சுவர் ஓவியங்கள். 
ராஜராஜ சோழனின் அழகிய தோற்றம் சுவரில ஓவியமாக-
சரஸ்வதி மஹாலில் உள்ள பெல் டவரின உட்புற தோற்றம். இங்கிருந்து நகரின அழகை கண்டு ரசிக்கலாம். டவரின மேலே செல்ல மெல்லிய உடல்வாகு தேவை...குறுகலான படிக்கட்டுகளே அதற்கு காரணம்.
கோபுரத்தின அமைப்பு-
இதன் உட்புறமும் அழகிய கட்டமைப்பு. இருட்டாக இருந்ததால் உடன் வந்தவர்கள் அனைவரையும் 1,2,3 சொல்லி கேமரா பிளாஷ் மூலம் அனைவரும் ஒரே சமயத்தில் எடுத்தபடம் கீழே-
புகைப்படங்கள் அதிகம் இருந்ததால் அதை வீடியோவாக மாற்றி கீழே பதிவிட்டுள்ளேன். அனைத்து படங்களையும் பாருங்கள்.
தஞ்சாவுருக்கு அருகில் இருப்பவர்கள் ஒரு முறை தஞ்சை சென்றுவாருங்கள.தமிழ்நாடு சுற்றுலா வருபவர்கள் தஞசையையும் உங்கள் லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பின்குறிப்பு- எனது 400 ஆவது பதிவிற்கு பதிவிற்கு வருகையின் மூலமும் வாக்குகள் மூலம் கருத்துக்கள் மூலமும் மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி... 

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...