அமிதாப்பச்சன் என்றாலே நமக்கு குரோர்பதிதான் நினைவுக்கு வரும். சில வருடங்களுக்கு முன் டிவியில் வந்த பிரபலமான ப்ரோகிராம் அது.அதைப்போலவே உள்ள விளையாட்டு இது.700 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை ஒப்பன் செய்ததும் உங்களுக:கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஒரு கேள்வி கேட்கப்பட்டு உங்களுக்கு நான்கு விதவிடைகள் இருக்கும் சரியான விடையை நாம் தேர்வு செய்யவேண்டும்.விடை உங்களுக்கு தெரியவில்லையென்றால் மூன:று வாய்ப்புக்கள் உங்களுக்கு வழங்கப்படும்.50-50 (நான்கு விடைகளில் இரண்டு மறைந்து-இரண்டு விடைகள் உங்களுக்கு ஸ்கிரீனில் டிஸ்பிளே ஆகும். சரியான விடையை அதிலிருந்து தேர்வு செய்யவேண்டும்.) அடுதது போன் மூலம் யாராவது ஒருவரிடமிருந்து தகவல் கேட்டுபெறலாம். மூன்றாவதாக மக்கள் கருத்தினை கேட்டு அவர்களில் எது அதிகமான வாக்குகள் உள்ளதோ அதனை தேர்வு செய்யலாம்.ஆயிரம் ரூபாயில் இருந்து மதிப்பு ஆரம்பித்து ஒருகோடி வரை உயர்ந்துகொண்டே செலலும்.
பொதுஅறிவு வளர்வதுடன் நீங்கள் எவ்வளவு ரூபாய் சம்பாதிக்கின்றீர்கள் என பார்ககலாம். விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.