வேலன்:-My Diet wiz -நமது உடல் எடையை குறைக்க

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.





(945)
விளக்கம்:

உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவையும், தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவினாலே உண்பானானால், அவனுக்குப் பிணிகளால் துன்பமில்லை.





என்னடா இவன் திடீரேன்று மருத்துவம் பக்கம் போயிட்டானே என எண்ணவேண்டாம். மருத்துவம் மற்றும் உடல்நல சம்பந்தமான சாப்ட்வேர் கிடைக்கவே அதை பற்றி பதிவிடுகின்றேன்.நமது உடலுக்கு தேவையான உணவு வகைகளையும் அதன் சத்து அளவுகளையும் உடல் எடையை நமது கண்ட்ரோலுக்கு கொண்டுவருவது பற்றியும் இந்த சாப்ட்வேரில அறிந்துகொள்ளலாம்.5.5 எம்.பி.கொள்ளளவு உள்ள இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும். அதில நமது பிறந்த தேதி மற்றும் பெயர் உடல் எடை, உயரம் ஆகிய விவரங்களை தரவேண்டும்.

நமது உடல் எடையை குறைக்க ஓரு குறிப்பிட்ட நாளையும் குறைத்தபின் வரும் எடையை குறிக்கவேண்டும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
தேவையான எடையையும் தேதியையும் குறிப்பிட்டு Calculate  கிளிக் செய்யவும்.
இப்போது உங்களுக்கு அறிக்கை ஓன் று கிடைக்கும். கீழே உள்ள விண்டோவை பாருங்கள்.
இப்போது உங்களுக்குகீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். இதில வலதுபுறம் உணவு வகைகள் தெரியவரும்.
நாம் சாப்பிடும உணவு வகைகள் லிஸ்ட் எல்லாம் கிடைக்கும். அதில நாம் சாப்பிடும் உணவு பிரிவை தேர்வு செய்யுங்கள்.

நான் பிஸ்கட்டை தேர்வு செய்தேன். அதற்கான Food Log Entry கான விண்டோ கீழே கிடைக்கும்.

அதில் அந்த பிஸ்கட்டில் உள்ள Calories.Fat,Carb,Protein எவ்வளவு அளவுகள் உள்ளன என மொத்தத்தையும் தெரிந்துகொள்ளலாம். அதைப்போல நமது தினசரி செயல்களையும் தேர்வு செய்யவேண்டும். நான் பாத்ரூமில் நடனம் என்பதை தேர்வு செய்து நேரத்தையும் 20 நிமிடம் என குறிப்பிட்டேன்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில இடதுபுறம் உள்ள Body Log கிளிக் செய்து நமது மெடிக்கல் விவரங்களை குறிப்பிடவும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
மருத்துவம் -டாக்டர் - உடல்கட்டுப்பாடு என்பதால் ஒன்றுக்கு இரண்டுமுறை இதில் உள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்து உடலை கட்டுக்குள் கொண்டுவாருங்கள்.ஒவ்வோருவரின உடல் எடை - உணவு பழக்கங்கள் - வேலைகள் வெவ்வேறாக இருக்கும் என்பதால் இதைப்பற்றி மேலோட்டமாக பதிவிட்டுள்ளேன்.நன்கு படித்துப்பார்த்து பயனடையுங்கள். 
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
அப்போதிலிருந்து இந்த மனுஷன் என்னத்தை பார்க்கின்றான் என தெரியலையே...
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

18 comments:

மாணவன் said...

வேலன் சார் ...

அருமை, அசத்தலான பதிவு ,

இதைப்போலவே இன்னும் நிறைய பயனுள்ள பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் சார்....

நன்றி சார்...

S Maharajan said...

அருமை,அசத்தலான பதிவு
வேலன் சார்.

Chitra said...

"நான் வந்துட்டேனா" என்று அங்கே தேடாதீங்க....... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....



diat wiz or diet wiz?

பொன் மாலை பொழுது said...

அட மாப்ஸ், நல்லாத்தான் கீது இத்தே நம்ம தோஸ்து கீதே .....ஆங்க ..டவுசர் பாண்டி .. அததுக்கு அனுப்பி விடுங்க மொதல்ல !!

mahaboob said...

உடல் பருமனானவர்களுக்கு நல்ல சாப்ட்வேர் தொடர்க உங்கள் பணி
நன்றி வேலன் சார்

மனோ சாமிநாதன் said...

தொடர்ந்து இது போன்ற பயனுள்ள பதிவுகளை பார்வையாளர்களுக்கு அளித்து வருகின்றீர்கள்!
தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி!!

மச்சவல்லவன் said...

வணக்கம் வேலன் சார்...அருமையான பதிவு சார்.உடல்எடையை கட்டுபடுத்தவும் மென்பொருள் இருக்கிறது என்று இந்த பதிவின்மூலமாக அறிகிறேன்.மிக்க நன்றி வேலன் சார்.

...நன்றி. வாழ்த்துகள்..

முஹம்மது நியாஜ் said...

அன்புமிகு வேலன் அவர்களுக்கு
மருந்துவ பதிவு மிக பயனுள்ளது, இதற்க்காக திருகுறள் பதிவு செய்தது உங்களது வழக்கமான குறும்பு.

சசிகுமார் said...

பயனுள்ள தகவல் நண்பரே ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வேலன். said...

DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
வேலன் சார் ...

அருமை, அசத்தலான பதிவு ,

இதைப்போலவே இன்னும் நிறைய பயனுள்ள பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் சார்....

நன்றி சார்...//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிம்பு சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

S Maharajan கூறியது...
அருமை,அசத்தலான பதிவு
வேலன் சார்.//

நன்றி மஹாராஜன் சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
அட மாப்ஸ், நல்லாத்தான் கீது இத்தே நம்ம தோஸ்து கீதே .....ஆங்க ..டவுசர் பாண்டி .. அததுக்கு அனுப்பி விடுங்க மொதல்ல !!//

அட...அவருக்குதான் முதலில் கொடுத்து சோதித்து பார்த்தேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

mahaboob கூறியது...
உடல் பருமனானவர்களுக்கு நல்ல சாப்ட்வேர் தொடர்க உங்கள் பணி
நன்றி வேலன் சார்//

நன்றி மஹாபூப் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

மனோ சாமிநாதன் கூறியது...
தொடர்ந்து இது போன்ற பயனுள்ள பதிவுகளை பார்வையாளர்களுக்கு அளித்து வருகின்றீர்கள்!
தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி!!//

மனோ அக்கா...எனது பதிவிற்கு முதன்்முதலாக வந்துள்ளீர்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும வாழ்த்துக்கும நன்றி ்வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
வணக்கம் வேலன் சார்...அருமையான பதிவு சார்.உடல்எடையை கட்டுபடுத்தவும் மென்பொருள் இருக்கிறது என்று இந்த பதிவின்மூலமாக அறிகிறேன்.மிக்க நன்றி வேலன் சார்.

...நன்றி. வாழ்த்துகள்..//

நன்றி மச்சவல்லவன் சார்... வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

முஹம்மது நியாஜ் கூறியது...
அன்புமிகு வேலன் அவர்களுக்கு
மருந்துவ பதிவு மிக பயனுள்ளது, இதற்க்காக திருகுறள் பதிவு செய்தது உங்களது வழக்கமான குறும்பு.//

நன்றி முஹம்மது நியாஜ் சார். எங்கே கொஞ்ச நாட்களாக தங்களை பதிவில் காணஇயலவில்லை..திருக்குறள் இந்த பதிவிற்கு பொருத்தமாக இருக்கும ்என்பதால் பதிவிட்டேன். தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
பயனுள்ள தகவல் நண்பரே ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

நன்றி சசிகுமார்..தங்கள் வருகைக்கும கருத்துக்கும நன்றி...வாழ்க வளமுடன்,:வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
"நான் வந்துட்டேனா" என்று அங்கே தேடாதீங்க....... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....//

நீங்கள் இங்கு வந்திட்டீங்களா...நான் உங்களை அங்கு தேடிக்கிட்டிருந்தேன். தங்கள் வருகைக்கும வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி...வாழக் வளமுடன்,வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...