பிடிஎப் வகை பைல்களை படிக்க மற்றும் ஒரு சாப்ட்வேராக இது உள்ளது. போர்டபிள் வெர்ஷனாக இது உள்ளதால் தேவைப்படும் சமயம் மட்டும் நாம் பயன்படுத்திக்கொள்ளளலாம். 4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டர்ல் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இதில் முதலில் உள்ள பைல்கிளிக் செய்து நீங்கள் படிக்க விரும்பும் பிடிஎப்பைலினை தேர்வு செய்யவும். பின்னர் நீங்கள் பிடிஎப் புத்தகத்தினை ஒவ்வொரு பக்கமாக பார்ககவிரும்பினால் இிதில் உள்ள பேஜ் கிளிக் செய்தால் போதுமானது.இதில் வேண்டிய பக்கம் மட்டுமோ அல்லது முழு பக்கங்களையோ பிரிண்ட் செய்துகொள்ளும் வசதி உள்ளது. மேலும் இதில் உள்ள ஸ்கோரல் கிளிக் செய்தால் நமக்கான விண்டோவானது மெதுவாக நகர்ந்து ஒவ்வொரு பக்கமாக நமக்கு டிஸ்பிளே ஆகும். பிடிஎப் பைலினை விரைந்து பார்வையிட இதனை பயன்படுத்தலாம்.மேலும் இதில் உள்ள டூல்ஸ் டேபினை கிளிக் செய்து வரும் விண்டோவில் விரும்பிய பக்கத்தினை நாம் ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம். இதில் உள்ள விண்டோ டேபினை கிளிக் செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை ஒப்பன் செய்து தனிதனியே படிக்கலாம். இதன் மூலம் நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட பைல்களை சுலபமாக ஒப்பீடு செய்து கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment