Showing posts with label வீடியொ.ஆடியோ..வேலன்.திரைப்படம்.இணையம்.audio.video.velan.web.. Show all posts
Showing posts with label வீடியொ.ஆடியோ..வேலன்.திரைப்படம்.இணையம்.audio.video.velan.web.. Show all posts

வேலன்:- இலவச வீடியோ-ஆடியோ ப்ளேயர் - PMPlayer

PMPlayer எனப்படும் இது ஒரு இலவச மென்பொருளாகும். இது அனைத்துவிதமான வீடியோ பைல்களையும் ஆடியோ பைல்களையும் சுலபமாகவும் விரைவாகவும் திறக்கக்கூடியது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
 இதன் கீழ்புறம் நிறைய ஐகான்கள் ;கொடுத்திருக்கின்றார்கள். இதில் முதலாவது ஐகானை கிளிக் செய்தால் பைல்கள் திறப்பதற்கான டேப் ஓப்பன் ஆகும். தேவையான பைலினை தேர்வ சேய்து ஒடவிடலாம். இரண்டாவதாக உள்ள ஐகானை கிளிக்செய்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதன் மூலம் விதவிதமான வீடியோ ஆடியோ பைல்களை திறக்கலாம்.டிவிடி பைல்களை திறக்கலாம். வெப்காம் திறக்கலாம். இணைய பைல்களை திறக்கலாம்.வீடியோவை ரெக்கார்ட் செய்யலாம். வேண்டிய பார்மெட்டுக்கு வீடியோவினை மாற்றிக்கொள்ளலாம்.சில வீடியோக்களில் வெளிச்சம்குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும் அவ்வாறான வீடியோ பைல்களை வேண்டியவாறு மாற்றம்  செய்து கொள்ளலாம். 
 ஆடியொ பைல்களின் தரத்தினை மேம்படுத்தலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

 பார்மெட் செய்யப்பட்ட பைலினை சேமிக்க வேண்டிய இடத்தினை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள ஸ்டார்ட் கிளிக் செய்திட சில நிமிடங்களில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இந்த சாப்ட்வேர் மூலம் வீடியோ காலினையும் வீடியோ கான்ப்ரன்ஸ்ஐயும் செய்யலாம்.வீடியோவில் உள்ள சப்டைடிலில் வேண்டிய மொழியையும் நாம் மாற்றிக்கொள்ளலாம்.வீடியோவில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பதுடன் நெட்ஓர்க் ஸ்டீரிமிங்ஸ் செய்யலாம்.நிறைய வசதிகளுடன் இலவசமாக கிடைப்பதால் இதனை பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...