வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix

புகைப்படங்கள் வேண்டிய மாற்றங்கள் செய்திடவும் வெவ்வொறு பார்மெட் புகைப்படங்களை பார்வையிடவும் வேண்டிய மார்மெட்டுக்கு மாற்றிடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட
இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு தேவையான புகைப்படத்தினை கணிணியிலிருந்து தேர்வு செய்திடவும்.
இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் ;செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் பேக்கிரவுண்ட் கலர் - கருப்பு வெள்ளை நெகட்டிவ் -பிரைட்நஸ் -கோல்ட் கலர்.வார்ம்கலர் -அனிமேஷன் என நிறைய ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள்.தேவையாதை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
மேலும் இதில் உள்ள சிறப்பான வசதி என்ன என்றால் ஒரு புகைப்படத்திற்குள் மற்றொரு புகைப்படத்தினை நீங்கள்மறைத்துவைக்கலாம். இரண்டு புகைப்படங்கள் சேர்ந்து உங்களுக்கு ஒரே படமாக தெரியும்.
தேவையான புகைப்டத்தினை தேர்வு செய்துகொள்ளுங்கள் மறைக்கவேண்டிய புகைப்படத்தினையும் தேர்வு செய்துகொள்ளுங்கள்.சேமிக்கவிரும்பும் இடத்தினை தேர்வு செய்துகொள்ளுங்கள். பாஸ்வேர்ட் கொடுத்து சேமியுங்கள். இப்போது உங்களுக்கான இடத்தில் சென்று பார்த்தால் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு மீண்டும ;இரண்டு புகைப்படங்களும் வேண்டும ;என்றால் மீண்டும் இந்த சாப்ட்வேரினை பயன்படுத்தி புகைப்படங்களை பிரித்துகொள்ளலாம்.அதுபோல புகைப்படத்தில் அளவினை தேவையான அளவு தரம் குறையாமல் குறைத்துக்கொள்ளலாம்.புகைப்படத்தினை முழு ஸ்கிரில் பார்த்தல் - புகைப்படத்தினை வேண்டிய அளவில் சுற்றுதல் -புகைப்படத்தினை பெரியதாக்கி பார்த்தல் போன்ற வசதிகள் இதில் உள்ளன.பயனபடுத்திப்பாருங்கள். 
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

1 comments:

வேலன். said...

அருமை நண்பரே
நன்றி வணக்கம்
TEX WILLERப

புகைபப்டத்தில் இருப்பவரை பாரத்தவர்போல் தெரிகின்றதா? வருகைக்கும் கருத்துக்கும் ந்னறி சார்..
வாழ்க வளமுட்ன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...