Showing posts with label அறிந்தகொள்ளுவோம் u-torrent.. Show all posts
Showing posts with label அறிந்தகொள்ளுவோம் u-torrent.. Show all posts

வேலன்:-அறிந்தகொள்ளுவோம் u-torrent.



<span title=
சில சாப்ட்வேர்கள்-படங்கள் -யூடோரண்ட் மூலம்
பதிவேற்றியிருப்பார்கள்.அதை பதிவிறக்கம் செய்ய
கிளிக் செய்தால் Download This Torrent என நமக்கு
விண்டோ ஒன்று வரும். நம்மிடம் அதேபோல்
யூடோரண்ட் இருந்தால்தான் நம்மால் சுலபமாக
டவுண்லோடுசெய்யமுடியும். அதை பதிவிறக்கி
எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.
முதலில் இதை டவுண்லோடு செய்ய இங்கு
கிளிக்
செய்யவும்.இதுவும் மிக குறைந்த அளவினை
உடையது 215 கே.பி.தான். நீங்கள் டவுண்லோடு
 செய்ததும் இந்த மாதிரி படம் கிடைக்கும்.


இதை உங்கள் கணிணியில் இன்ஸ்டால்
செய்யவும். அதன்பின் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது நீங்கள் பதிவிறக்க வேண்டிய யூடோரண்ட்டில்
பதிவேற்றிய படத்தை பதிவிறக்க கிளிக் செய்யவும். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தை தேர்வு செய்து
(சி-டிரைவை தவிர வேறு டிரைவில் சேமித்தல்
நல்லது) ஓ.கே.கொடுங்கள்.உங்களுக்கு படம் டவுண்லோடாக
ஆரம்பிக்கும்.இப்போது உங்கள் டாக்ஸ்பாரில் இதனுடைய 
சிம்பல் இருக்கும் . கீழ்கண்ட படத்தினை பாருங்கள்.
இதில் உள்ள u சிம்பலை நீங்கள் கிளிக் செய்தால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Hide/Show u Torrent கிளிக் செய்தால் யுடோரண்ட்
விண்டோவினை காணலாம். அன்லிமிடட் தவிர மற்ற
இணைய இணைப்பு உள்ளவர்கள் இலவச பயன்பாட்டு
நேரம் தவிர மீதி நேரங்களில் இந்த டவுண்லோடினை
நிறுத்திவைக்கலாம். இலவச நேரங்களில் இதை மீண்டும்
டவுண்லோடு செய்யலாம். அதேப்போல் அவசரவேலை
யாக வெளியில் செல்கின்றோம். அப்போதும் இதில் உள்ள
Pause all Torrents கிளிக் செய்துவிட்டுசெல்லலாம். அதேப்போல்
நிறைய பைல்களையும் ஒரே நேரத்தில் இதன் மூலம்
நாம் டவுண்லோடுசெய்யலாம். இதில் உள்ள டவுண்லோடு
முடிந்ததும் நமக்கு ஒர் எச்சரிக்கை செய்திவந்த பைலானது
கம்ளிடட் காலத்திற்கு சென்றுவிடும். நாம் கவனிக்காமல்
விட்டுவிட்டால் சாதாரணநேரங்களில் அந்த பைலானது
அப்லோடு ஆகி கொண்டிருக்கும். எனவே அதை நிறுத்தி
வையுங்கள் அல்லது அதிலிருந்து ரிமூவ் செய்துவிடுங்கள்.
(கடந்த வாரம் இதைப்போல் நான் கவனிக்காமல் விட்டதில்
எனக்கு 300எம்.பி. அதிகமாக போய்விட்டது)
இப்போது நாம் சேமித்து வைத்தஇடத்தில் டவுண்லோடு
செய்த பைலானது அமர்ந்திருக்கும். பயன்படுத்திபாருங்கள்


வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
அட புதுப்பாட்டு இல்லைங்க பழைய பாட்டைதான்
கேட்கின்றேன்.
இன்றைய PSD DESIGN 46 க்கான புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்தபடம் கீழே:-
இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதுவரை யூடோரண்ட் தெரிந்துகொண்டவர்கள்:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...