Showing posts with label ஆங்கிலம்.சிங்களம்.தமிழ்.அகராதி.மொழி.வேலன்.இலங்கை.srilanga.velan.tamil.english.dictionary.sinhala.. Show all posts
Showing posts with label ஆங்கிலம்.சிங்களம்.தமிழ்.அகராதி.மொழி.வேலன்.இலங்கை.srilanga.velan.tamil.english.dictionary.sinhala.. Show all posts

வேலன்:-சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலம் சுலபமாக கற்க

சிங்கப்பூர்,மலேசியா போன்று இலங்கையும் சுற்றுலா செல்ல சிறந்த இடமாகும். அங்கு நீங்கள் சுற்றுலா செல்கையில் சிங்களமும் உங்களுக்கு தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். சின்ன சின்ன வார்த்தைகள் சிங்களத்தில்அறிந்துகொள்ள இந்த இணையதளம் உதவுகின்றது. இந்த முகவரிதளம்செல்ல இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் 25 பாடங்கள் கொடுத்துள்ளார்கள். ஒவ்வோரு பாடத்திலும் பத்துக்கும் மேற்பட்ட உதாரணங்கள் இருக்கின்றது. ஒவ்வொரு உதாரணத்திற்கும் அதன் தமிழ்பெயர்.ஆங்கிலபெயர்.சிங்கள பெயர்கொடுத்துள்ளார்கள். அதுபோல ஒவ்வொரு வார்தையையும் ஒலிவடிவில்கொடுத்துள்ளார்கள். இதில் உள்ள ஒலிவடிவ ஐகானை கிளிக் செய்திட உங்களுக்கு அதன் பெயரானது ஒலிவடிவில் நமக்கு கிடைக்கும். கீழே பறவைகள் பற்றி உள்ள பாடத்தில் மயிலை பற்றிக் கொடுத்துள்ளார்கள்.


அதுபோல உறவினர்கள் பற்றி கொடுத்துள்ளதை கவனியுங்கள்.

இந்த இணைய பக்கத்தில் வலதுபுறம் உள்ள டிக்‌ஷனரியை கிளிக் செய்கையில் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தமிழ்,ஆங்கிலம்,சிங்களம் என மூன்று மொழிகளிலும் கீ-போர்ட் கொடுத்துள்ளார்கள். உங்களுக்கு தெரிந்த மொழில் தட்டச்சு செய்து தேவையான வார்தைக்கான மொழிபெயர்ப்பையும் அதன் உச்சரிப்பையும் ஒலி வடிவில் அறிந்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

அப்புறம் என்ன புதுமொழி கற்க கிளம்பிவிட்டீர்களா...பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...