கணிணியில் நாம் ஆடியோ பதிவு செய்வதனால் சவுண்ட் ரேகார்டர் மூலம் செய்ய வேண்டும். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் நாம் ஆடியோவினை பதிவு செய்யலாம். பைல்களை படிக்கலாம். பைல்களை ஆடியோ பைல்களாக மாற்றலாம்.. இணையத்தில இருந்து ஆடியோவினை பதிவிறக்கம் செய்யலாம். 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் உள்ள ரெகார்ட் பட்டனை கிளிக் செய்து ஏற்கனவே கணிணியில் உள்ள பைல்களை ஆடியோ பைல்களாக மாற்றலாம்.மைக் மூலம் நாம் பேசி ஆடியோ பைல்களாக சேமிக்கலாம். வேர்ட். டெக்ஸ்ட் பைல்களை நாம் ஆடியோ பைல்களாக மாற்றிகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். தேவையான பைலை தேர்வு செய்து அதனை படித்து காண்பிக்க சொல்லலாம்.வேண்டிய பைல்களை ஆடியோ பைல்களாக தேவைப்படும் இடத்தில் சேமித்துவைக்கலாம்.
குறிப்பிட்ட நேரத்தில் ரெகார்ட் செய்யும் வசதியும் உள்ளதால் நேரத்தை நிர்ணயித்து கொள்ளலாம்.தேவைப்படும் இணைய முகவரியை இதில் சேமித்து வைத்து குறிப்பிட்ட நேரத்தில் பதிவிறக்கம் செய்வது போல் செட்செய்யலாம்.
4 எம்.பி. கொள்ளவு கொண்ட இந்த சின்ன சாபட்வேரில் போதுமென்கின்ற அளவிற்கு வசதிகள் கொடுத்துள்ளதே...போதாதா நமக்கு...நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.