நம்மிடம் உள்ள புகைப்படங்களை விதவிதமான கார்ட்டுன் படங்களாக மாற்ற நாம் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.13 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.இதில் உள்ள Add பட்டனை கிளிக் செய்து உங்களிடம் உள்ள நீங்கள் மாற்றவிரும்பும் புகைப்படங்களை தேர்வு செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இதில் நீங்கள் புகைப்படத்தினை தேர்வு செய்ததும் உங்களுக்கு Crop and Edit,File Name.Size.Status என 4 விதமான டேப்புகள் கிடைக்கும். இதில் உள்ள Crop and Edit கிளிக் செய்திட வரும் விண்டோவில் நீங்கள் புகைப்படத்தினை தேவையான அளவு கட் செய்திடலாம். மேலும் புகைப்படத்தில் கலர் மற்றும் பிரைட்னஸ் அட்ஜஸ்ட் செய்திடலாம்.இறுதியாக இதில் உள்ள ஓ.கே.பட்டனை கிளிக் செய்திடவும். மேலும் இதில் உள்ள Output Path விண்டோவில் நீங்கள் படத்தினை சேமிக்கவிரும்பும் இடத்தை தேர்வு செய்யவும். இதில் உள்ள Choose the Cartoon Effect கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.இதில் 60 விதவிதமான கார்டுன் மாடல்கள் இருக்கும் தேவையானதை கிளிக் செய்யவும்.
கீழே உள்ள புகைப்படத்தினை நான் தேர்வு செய்துள்ளேன்.
கார்ட்டூன் மாற்றத்திற்கு பின்னர் வந்துள்ள படம் கீழே:-
பாண்டிச்சேரி கடற்கரையில் எடுக்கப்பட்ட படம் கீழே:-
மாற்றத்திற்கு பின் வந்துள்ள படம் கீழே:-
படங்களை நீங்கள் தேர்வு செய்து மாற்றங்கள் நிகழ சில நிமிடங்கள் ஆகின்றது. அதற்கான தகவல்நமக்கு கிடைக்கின்றது. இறுதியாக ஓ.கே.என வந்ததும் நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான புகைப்படம் கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.