Showing posts with label கால்குலேட்டர்.வேலன்.மெக்கானிக்கல்.நேரம்.கணக்கு.velan.mechanical.calculator.time.. Show all posts
Showing posts with label கால்குலேட்டர்.வேலன்.மெக்கானிக்கல்.நேரம்.கணக்கு.velan.mechanical.calculator.time.. Show all posts

வேலன்:-மெக்கானிக்கல் கால்குலேட்டர்.

மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து பிரிவினருக்கும் தேவையான கால்குலேட்டராக இந்த மெக்கானிக்கல் கால்குலேட்டர் உள்ளது. 4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதன் மேல்புறம் உள்ள டேப்பில் File.Edit.Machning.Precision.Math.Conversions.Views .Tools என நிறைய வசதிகளை உள்ளடக்கிய டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.இதில் உள்ள மெஷினிங் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்திட மெஷின் எடுத்துக்கொள்ளும் நேரத்தினை துல்லியமாக கணக்கிடலாம். 
 அதுபோல அடுத்துள்ள மேக்ஸ் டேபிளை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் கொடுத்துள்ள நமக்கு தேவையான ஆப்ஷனை கிளிக் செய்து வேண்டிய விவரங்கள் பெறலாம்.
 இதில் உள்ள கன்வர்சன் டேபிளை கிளிக் செய்திட நேரம் முதல் கொண்டு நீள அகலங்கள். ஸ்பீடு.டெட்டா ஸ்டோரேஜ்.பவர்.ப்ரஷர்.என அனைத்தினையும் நாம் கணக்கிடலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
எண்களை ரோமன் லெட்டரில் மாற்றுவதற்க்கு நமக்கு குறிப்பிட்ட வரையில் தான் தெரியும் இதில் எந்த எண்ணிலிருந்து எந்த எண்வரை ரோமன் லெட்டர் வேண்டுமோ அந்த எண்களை எிளிதில் அறிந்துகொள்ளலாம்.ஒரு மீட்டர் அளிவிற்கான கிலோமீட்டர் முதற்கொண்டு அறிய கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
 நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப்பொருட்கள் குதிரைத்திறனில் கொடுத்திருப்பார்கள். அது எவ்வளவு மின்சாரத்தினை எடுத்துக்கொள்ளும என இதில் கன்வர்ட் செய்து அறிந்துகொள்ளலாம். கீழே உள் விண்டோவில் பாருங்கள்.
வாழ்க்கையில் ஏதாவது ஒரு நேரத்தில் ஏதாவது ஒரு கண்க்கு  நமக்கு தேவைப்படும். குறைந்த அளவிலேயே இது இடம் எடுத்துக்கொள்வதால் உங்கள் கணிணியில் ஏதாவது ஒரு டிரைவில் போட்டுவையுங்கள.அவசரத்திற்கு பயன்படும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...