Showing posts with label சுற்றுலா. Show all posts
Showing posts with label சுற்றுலா. Show all posts

வேலன்:-சுற்றுலா புகைப்படங்களை ஸ்லைட்ஷோவாக மாற்ற

செல்போனுக்கு முறையாக ரீ-சார்ஜ் செய்தால் தான் அதன்பணிகளை முறையே செய்யும். அதுபோல் நமது உடலுக்கு மனதுக்கு ரீசார்ஜ் செய்தால்தான் வாழ்க்கை இனிமையாக அமையும். அதற்கு வெளியூரோ -வெளிநாடோ வருடத்திற்கு ஒருமுறை சுற்றுலா சென்றுவந்தால் மனம் மகிழ்ச்சிஅடைவதுடன் உடலும் மகிழும்.அவ்வாறான பயணங்களில் நாம் எடுக்கும் புகைப்படங்களை நம் உறவினர்களுக்கு -நண்பர்களுக்கு அனுப்பி வைக்கலாம். அவ்வாறு எடுக்கப்பட்ட சுற்றுலா புகைப்படங்களை ஸ்லைட்ஷோவாக மாற்ற இந்த தளம் நமக்கு உதவுகின்றது. இந்த தளம் காண நீங்கள் இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஸ்டார்ட் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட புகைப்படங்களின் டெம்ப்ளேட் கிடைக்கும். அதில் உங்களுக்கு விருப்பமானதை கிளிக் செய்யவும்.
அடுத்து உங்கள் புகைப்படங்களை தேர்வு செய்யவும். புகைப்படங்கள் பேஸ்புக்கிலோ - உங்கள் கணிணியிலோ - பிகாஸா மற்றும் பிளிக்கரிலோ இருக்கலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இப்போழுது உங்கள் ஸ்லைட் ஷோவிற்கு பெயரினை வையுங்கள்.ஸ்லைட்ஷோவிற்கு விருப்பபட்டால் இசையையும் சேர்ககலாம்..
அனைத்துபணிகளும் முடிந்தவுடன் அதனை நீங்கள் மற்றவர்களுக்கு இமெயில் மூலமாக எளிதில் பகிர்ந்துகொள்ளலாம்.கீழே நான் உருவாக்கிய ஸ்லைட்ஷோவினை பாருங்கள்.




ஸ்லைட்ஷோ உருவாக்கி பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...