Showing posts with label சென்னை.பஸ்.பஸ்ரூட்.வேலன்.தியாகராயநகர்.சென்ட்ரல்.velan.bus.busroute.t.nagar.central. Show all posts
Showing posts with label சென்னை.பஸ்.பஸ்ரூட்.வேலன்.தியாகராயநகர்.சென்ட்ரல்.velan.bus.busroute.t.nagar.central. Show all posts

வேலன்:-சென்னையின் பஸ்ரூட் எளிதில் அறிந்துகொள்ள


சென்னையின் பரப்பளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. தாம்பரத்தில் ஆரம்பித்து கும்மிடிப்பூண்டி வரை பரந்து விரிந்து இருக்கின்றது. புது புது ஊர்களும் -புதுபுது கட்டிடங்களும் நம்மை மிரள வைக்கின்றது.சென்னைக்கு பழக்கமானவர்களே பஸ் ரூட் தெரியாமல் முழிக்கும் போது நாமெல்லாம் எந்த மூளைக்கு..? சென்னையின் பஸ் ரூட் எளிதில் அறிந்து கொள்ள இந்த இணைய தளம் நமக்கு அருமையாக வழிகாட்டுகின்றது.இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் எங்கிருந்து எங்கு செல்லப்போகின்றீர்களோ அந்த இடத்தை குறிப்பிடவும்.நாம் தாம்பரத்திலிருந்து சூளை போஸ்ட் ஆபிஸ் குறிப்பிட்டுள்ளேன்.எனக்கு வந்துள்ள படத்தினை பாருங்கள்.



இதில் எந்த ரூட் நமக்கு தேவையோ அந்த ரூட்டை கிளிக் செய்தால் பஸ் எங்கிருந்து கிளம்பி எந்த எந்த ஸ்டாப்பிங் வரை செல்லும் என்கின்ற விவரம் கிடைக்கும்.
மேலும் இதிலேயே முக்கிய இடங்களாக சியிஎம்டி.பிராட்வே.எக்மோர்.தியாகராயநகர்.திருவான்மியூர்.சென்ட்ரல் என இடங்களும்கொடுத்துள்ளார்கள்.உதாரணமாக நீங்கள் ;தி.நகர் கிளிக் செய்தால் அந்த ஊரிலிருந்து எங்கு எங்கு பஸ்கள் செல்கின்றன - தி.நகர் வழியாக எந்த எந்த பஸ்கள் செல்கின்றன என்கின்ற விவரம் பஸ் எண்ணுடன் நமக்கு கிடைக்கும்.பஸ் எண்ணை கிளிக் செய்தால் உங்களுக்கு அந்த பஸ்ஸீன் உடைய ரூட் மேப்புடன் கிடைக்கும்.மேலும் ஸ்பெஷல் ரூட் என ஏசிபஸ்.எல்எஸ்எஸ் பஸ். மினி பஸ். ஆர்ட்னரி பஸ்.இரவு சர்வீஸ் பஸ் என அனைத்து விவரங்களும் இதில் எளிதில அறிந்துகொள்ளலாம்.இந்த பக்கத்தை புக் மார்க்செய்து கொண்டால் மற்றவர்களுக்கு ரூட் பொட்டுகொடுப்பதுடன் இல்லாமல் சென்னையின் சந்துபொந்துகளையும் நீங்கள் எளிதில் அறிந்துகொள்ளளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...