நம்மிடம் உள்ள புகைப்படங்களை டிவிடியாக மாற்ற நிறைய சாப்ட்வேர் இருந்தாலும் புதியதாக இந்த சாப்ட்வேரினையும் நாம் பார்க்கலாம். 13 எம்.பி.கொள்ளள்வு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்..இதில் உள்ள ஸ்டேப் ஒன் கிளிக் செய்து உங்களுடைய புகைப்படங்களை தேர்வு செய்யவும்.இதில் புகைப்படங்கள் இடதுபுறம் வந்துவிடும். இந்த புகைப்படங்களின் கீழே உள்ள சிலைடரை நகர்ற புகைப்படங்களின் அளவினை பெரியதாக்கி பார்க்கலாம்.
வலதுபுறம் நமக்கு Edit Preview என்கின்ற ஆப்ஷன் கிடைக்கும. இதனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் வேண்டிய ஆப்ஷனை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.இப்போழுது நெக்ஸ்ட் கிளிக்செய்து அடுத்த ஸ்டெப் செல்லவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் புகைப்படத்திற்கு தேவையான பாடல்களை நாம் தேர்வு செய்யலாம் பாடலை அப்போழுதே கேட்கும்வசதியும் உள்ளது.
நெக்ஸ் கிளிக் செய்ய அடுத்த ஸ்டேப் கிடைக்கும். அதில் நமக்கு வேண்டிய அளவினை தேர்வு செய்துகொள்ளலாம்.
ஸ்டெப் 4 ல் உங்களுக்கு உங்களுடைய புகைப்படங்கள் டிவிடியாக மாறுவதை காணலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இறுதியாக உங்களுடைய டிவிடி எப்படி வேண்டும் என்பதனை தேர்வு செய்துகொள்ளுங்கள.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நீங்கள் கம்யூட்டரிலேயே இதனை டிவிடியாக சேமிததுவைக்கும் வசதி உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.