Showing posts with label டெலிட்.வேலன்.பைல்.velan.delete.windows xp.file.. Show all posts
Showing posts with label டெலிட்.வேலன்.பைல்.velan.delete.windows xp.file.. Show all posts

வேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டுஎடுக்க

சில நேரங்களில் -சில சமயங்களில் நாம் பைல்களை தவறுதலாக டெலிட் செய்துவிடுவோம். அவ்வாறு டெலிட் செய்த பைல்களை மீண்டும் கொண்டுவர இந்த சாப்ட்வேர் உதவும். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் மேற்புறம் உள்ள Search கிளிக்செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 உங்களுடைய கம்யூட்டரில் உள்ள டிரைவ்கள் அனைத்தும் காண்பிக்கப்படும். அதில் நீங்கள் எந்த டிரைவிலிருந்து பைல்களை மீண்டும் பெறவிரும்புகின்றீர்களோ அந்த டிரைவின் எதிரில் உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இப்போது உங்களுக்கு டிரைவில் உள்ள பைல்களின் வகைகள் கிடைக்கும். நீங்கள் எந்த அப்ளிகேஷனை - படத்தை - டாக்குமெண்டை பெற விரும்புகின்றீர்களோ அதனை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இப்போது உங்களுக்கு வலதுபக்கத்தில் உங்கள் டாக்குமெண்ட்டுகள் கிடைக்கும். அதில் அதன் தற்போதைய நிலவரமும் கிடைக்கும்.very good.good.and over written என பைலின் நிலவரம் அறியலாம். 
தேவையான பைலினை தேர்வு செய்து அதன் பிரிவியு பார்க்கலாம். மேலும் அதன் பிராபர்டீஸ் நாம் அறிந்துகொள்ளலாம்.
தேவையான இடத்தில் அதனை சேமித்துகொள்ளலாம். ஆனால் அதில் சிகப்பு நிறத்தில் Overwritten என வந்திருந்தால் அதனை மீட்டுஎடுப்பது கடினமே.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
 வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...