Showing posts with label தேடுபொறி.வேலன்.யூசி ப்ரவசர்.velan.ucbrowser.. Show all posts
Showing posts with label தேடுபொறி.வேலன்.யூசி ப்ரவசர்.velan.ucbrowser.. Show all posts

வேலன்:-வித்தியாசமான தேடுபொறி -யூசி ப்ரவ்சர்.-UC Browser

தேடுதல் பொறிகள் அதிகம் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வித்தியாசபடுகின்றன. அந்த வகையில் இந்த தேடுபோறி பல வித்தியாசங்களை கொண்டுள்ளது. 50 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நாம அதிகம் பயன்படுத்தும் பேஸ்புக்.இமெயில்.வாட்ச்அப் முதலியவற்றை முதலிலேயே கொடுத்துள்ளார்கள். அதனை கிளிக் செய்வதன் மூலம் நாம் நேரடியாக அதனுடைய தளத்திற்கு செல்லாம். அடுத்து வலது பக்கத்தில் ஸ்பிட் டெஸ்ட்.கூகுள் டிரான்ஸ்லேட்.மற்றும் வானிலை ரிப்போர்ட் ஆகியவற்றை கொடுத்துள்ளார்கள். அதனை கிளிக்செய்வதன் மூலம் நேரடியாக நாம் அதனதன் பயன்களை அறிந்துகொள்ளலாம்.


இதனை தவிரந்து கீழே டவுண்லோட்.சாப்ட்வேர.இசை.லைப்.ஷாப்பிங்.செய்திகள்.விளையாட்டு என பத்துவிதமான ஆப்ஷன்களும் அதில் பிரபலமான இணையதள முகவரிகளும் கொடுத்துள்ளார்கள். அதனை கிளிக் செய்வதன் மூலம் நேரடியாக அந்த இணையதளங்களுக்கு நாம் செல்லலாம்.


இதில் உள்ள விண்டோவினை கிளிக் செய்திட பிரபலமான இணையதளங்கள் உங்களுக்கு கிடைக்கும். இதில் கிளிக்செய்து தேவையினை பெறலாம் கீழே உள்ள விண்;டாவில் பாருங்கள்.


இது தவிர்த்து நமக்கு விருப்பமான இணையதளங்களையும்பெறலாம் இதில் உள்ள ஆட் பட்டனை கிளிக் செய்து நமது இணையதள முகவரியை இணைத்துக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் ;பாருங்கள்.




மேலும் நாம் ஒரு இணையதளம் பார்க்கையில் அதில் உள்ள புகைப்படங்கள் நமக்கு பிடித்திருந்தால் அதனை இ;தில் உள்ள டவுண்லோட் போட்டோ கிளிக் செய்திடஅந்த இணையத்திலி; உள்ள அனைத்து புகைப்படங்களும் நமக்கு கிடைக்கும் தேவையானதை தேர்வு செய்து கணிணியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அதுபோல கிரிக்கெட் ரசிகர்களுக்குஎன யூசி கிரிக்கெட் என சின்ன ஐகான்கொடுத்துள்ளார்கள். அதனை கிளிக் செய்ய கிரிக்கெட் விளையாட்டின விளையாடும் இடம் மற்றும் அணிகள் பற்றிஅறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பிடித்த சாபட்வேரினையோ இதர வீடியோவினையோ பதிவிறக்கம் செய்வதென்றால் இதில் உள்ள டவுணலோடு கிளிக் செய்திட பதிவிறக்கம் விரைந்து நடக்கும். மேலும் நீங்கள் நான்கைந்து இணையபக்கங்கள் ;திறந்து வைத்திருந்தால் இதில் உள்ள டேப்வியூவர் கிளிக் செய்திட அனைத்து இணையபக்கங்களும் உங்களுக்கு ஓரே விண்டோவில் தோன்றும்.இதன் கீழே வலது மூலையில் கொடுத்துள்ள ஸ்லைடரை கிளிக்செய்திட மானிட்டரின் வெளிச்சத்தினை கூட்டவோ குறைக்கவோ செய்திடலாம். மேலும் இதில் உள்ள எழுததுக்களை பெரியதாக பார்க்க நாம் கன்ட்ரோல் மற்றும் கூட்டல் கிளிக் செய்து எழுத்துக்களை பெரியதாக பார்ப்போம். ஆனால இந்த தேடுபோறியில் நாம் இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவது மூலம் எழுத்துக்களை பெரியதாகவோ சிறியதாகவோ மாற்றிப்பார்க்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...