கணிணியில் நாம் பியானோவாக மாற்றி இசையை உருவாக்கி ரசிக்கலாம். இந்த சாப்ட்வேர் கணிணியை பியோனாவாக மாற்ற உதவுகின்றது.9 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
இதில் பியோனோவின் நிறம் மாற்ற 4 வித வண்ணங்கள் கொடுத்துள்ளார்கள். மேலும் தேவையென்றாலும் நாம் இணையத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.
தேர்ந்தேடுத்த நிறத்துடன் வந்துள்ள பியானோ கீழே.
நீங்கள் கீபோர்ட் வாசிப்பதில் திறமையானவராக இருந்தால் இதில் நேரடியாக வாசித்து அதனை ரிக்கார்ட் செய்துகொள்ளலாம். நீங்கள் ஏற்கனவே அவர்கள் பதிவிட்டுள்ள பாடல்களை கேட்கவிரும்பினால் இதில் உள்ள ஓப்பன் பட்டனைகிளிக் செய்திட 50 வகையான பாடல்கள் உங்களுக்கு ரெடிமேடாக கிடைக்கும்.தேவையானதை கிளிக்செய்து பாடலினை கேட்டுமகிழலாம்.நீங்கள் புதியதாக கீபோர்ட் வாசிப்பதனாலும் வாசித்து அதனை ரிக்கார்ட் செய்து மற்றவர்களுக்கு போட்டுகாண்பிக்கலாம்.இவர்களுடைய இணையதளத்தில் நிறைய வீடியொ பைல்களை இணைத்துள்ளார்கள். அதனை பார்வையிடுவதன் மூலம் நாம் பியானோவினை சுலபமாக கற்று மகிழலாம். திறமைசாலியாக மாறலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.