முன்னோட்டமாக ஒரு குறிப்பு:- கடந்த வாரம் திடீரென்று
மழை பெய்த போது இணைய இணைப்பில் மின்சார இணைப்பை
துண்டித்துவிட்டேன். ஆனால் டெலிபோன் லைனை எடுக்க
வில்லை. எங்கோ இடி தாக்க போன் ஒயர் மூலம் எனது மோடம்
செயல்இழந்துவிட்டது.(இதனால் நான் பெற்ற அனுபவம்:-
மழைபெய்யும்போது இணைய இணைப்பு,மின் இணைப்பு,
போன் இணைப்பு ஆகிய மூன்றையும் எடுத்துவிடவேண்டும்)
அதனால் என்னால் பதிவின் பக்கம் வரஇயலவி்ல்லை.
நான் பதிவிட வராததன் காரணத்தை போனிலும் நேரிலும்
இ-மெயிலிலும் விசாரித்த அன்பு உள்ளங்களுக்கு எனது
பணிவான நன்றிகள்.
அன்புடன்,
வேலன்.

சென்ற பதிவினில் பார்த்தோம். இன்றைய பதிவில் நம்மிடம்
உள்ள் போட்டோக்களை எப்படி பிலிமாக மாற்றுவது (முவி பைலாக)
மாற்றுவது என பார்க்கலாம். இதைப் பற்றி நான் ஏற்கனவே
விண்டோ மூவி மேக்கரில் எப்படி செய்வது என பதிவிட்டுள்ளேன்.
விணடோமூவி மேக்கரில் பார்க்க விரும்புபவர்கள் இங்கு
மூவியாக மாற்றுவது அதைவிட சுலபமாக உள்ளது. இந்த சாப்ட்வேர்
மூலம் எப்படி போட்டோக்களை மூவியாக மாற்றுவது என பார்க்கலாம்.
முதலில் இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்குகிளிக்
செய்யவும்.நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோஓப்பன் ஆகும்.

இதில் உள்ள Add Files கிளிக் செய்து உங்கள் டிரைவில் உள்ள
புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.
இப்போது உங்கள் புகைப்படங்கள் இதில் உள்ள விண்டோவில்
வரிசையாக வரும். மேலே உள்ள படத்தை பாருங்கள்.
இதில் உள்ள Jump to கிளிக் செய்ய உங்களுக்கு தேவையான
படத்திலிருந்து தேர்வு செய்துகொள்ளலாம். அடுத்துள்ள
Organize கிளிக் செய்து உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும்.இதில் உள்ள புகைப்படத்தை நீங்கள்
வேண்டிய இடத்தில் மாற்றி அமைக்கலாம். இல்லை
கலந்தவாறு வரவேண்டும் என்றால் இதில் உள்ள
Shuffle கிளிக் செய்ய அதுவே மாறிவிடும்.கீழே உள்ள
புகைப்படத்தை பாருங்கள்.

இதில் உள்ள SoundTrack -ல் நமது விருப்ப பாடலை தேர்வு
செய்ய Browse கிளிக் செய்து உங்கள் டிரைவில் உள்ள
விருப்பமான பாடலை தேர்வு செய்யுங்கள்.

அதேப்போல் உங்கள் விருப்பமான Resulation என்ன தேவையோ
அதை தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

இப்போது அடுத்தபக்கத்தில் பாருங்கள். இதில் உள்ள ஆடியோ
செட்டிங் தேர்வு செய்யுங்கள்.ஆடியோவினை தேர்வு
செய்யும் சமயம் அதன் ஒலிஅளவையும் கவனமாக
தேர்வு செய்யுங்கள். அப்போதுதான் ரிசல்ட் நன்றாக வரும்.
அடுத்து இந்த பைலை எங்குசேமிக்க விரும்புகின்றீர்களோ
அந்த இடத்தை தேர்வு செய்து Go கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

இப்போது பணி முடிந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும்.

இதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யுங்கள்.
அவ்வளதுதான் உங்கள் புகைப்படங்கள் மூவி படமாக மாறி
விட்டது.இனி இதை சிடியில் காப்பி செய்து சிடிபிளேயர்
மறறும் டிவிடி பிளேயரில் கண்டுகளிக்கலாம்.
பதிவினை பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
இன்றைய டிசைன்:-

இன்றைய டிசைன் காண லிங்க்கை பதிவிறக்கம் செய்ய இங்கு.
கிளிக் செய்யவும்
இதுவரையில் புகைப்படத்தை பிலிமாக மாற்றியவர்கள்:-