Showing posts with label பெனோமியான்.velan.game.children.. Show all posts
Showing posts with label பெனோமியான்.velan.game.children.. Show all posts

வேலன்:-பெனோமியான் -விளையாட்டு.

சவாலாகவும் -சற்று பயம்கலந்தும் -மூளைக்கு அதிகஅளவு வேலையும் கொடுக்கும் விளையாட்டு இது. 300எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும். 
இங்குள்ள பார்க்கில் உள்ள மனிதருக்கு இரண்டுகண்களும் இருக்காது அவருக்கு நாம் பார்வை வரவழைக்கவேண்டும்.
இந்த புகைப்படத்தில் உள்ள பொருட்களை கண்டுபிடிக்கவேண்டும்.; அனைத்துப்பொருட்களையும் கண்டுபிடித்தால் உங்களுக்கு அடுத்த குளுவிற்கான பொருள் கிடைக்கும். மேலும் இதில் தனியே ஒருபடம் கொடுத்திருப்பார்கள். அதனை கிளிக் செய்ய உங்களுக்கு கடிகாரம் ஒன்று சுற்றி உங்களை வேறு இடத்திற்கு கொண்டுசெல்லும். அதில அந்த படத்தில் உள்ளபொருட்களை கண்டுபிடித்து சேர்ககவேண்டும்.
இந்த படத்தில உங்களுக்கு விதவிதமான ரோஜா மலர்கள் இருக்கும். அதுபோல விதவிதமான விளக்குகள் இருக்கும்.ரோஜா மலர்களின் நிறத்திற்கு ஏற்ப விளக்குகளையும் வரிசைகிராமமாக அடுக்கவேண்டும்.
இதில் வண்ண வண்ண இறகுகள்இருக்கும். அனைத்தையும் கண்டுபிடிக்கவேண்டும்.

இந்த படத்தில் உள்ள குளுவினை கண்டுபிடித்து அடுத்த லெவல் செல்லவேண்டும்.

முழுவிளையாட்டினையும் விளையாடி முடிக்க குழந்தைகளுக்கு குறைந்தது ஒருவாரமாவது ஆகும்.(தினமும் அரைமணிநேரம் என விளையாடி எனக்கு பத்து நாட்களானது இந்த விளையாட்டினை முடிக்க).இதில் உங்களுக்கு உதவிக்கு உதவி குறிப்பும்.குறிப்புதவியும் உள்ளது. விளையாடிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்..
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...