Showing posts with label பைல்.velan.file.date.windows xp.. Show all posts
Showing posts with label பைல்.velan.file.date.windows xp.. Show all posts

வேலன்-பைல் தயாரித்த தேதியை மாற்ற


நாம் கம்யூட்டரில் பணிபுரிகையில் ஒரு புதிய பைலை உருவாக்குவதாக வைத்துக்கொள்ளுவோம். அவ்வாறு உருவாக்கியஉடன் அதன் Properties சென்று பார்த்தால் நாம் பைலை உருவாக்கிய தேதி - நேரம் ஆகியவை தெரியவரும்.முன்தேதியிட்டு பைலை உருவாக்கியவாறு தேதியை சில நேரங்களில் மாற்றவேண்டி வரலாம். அந்த சமயங்களில் நமக்கு இந்த சின்ன சாப்ட்வேர் உதவிக்கு வரும். 1 எம்.பி .கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். நீங்கள் ஏற்கனவே உருவாக்கிஉள்ள பைலின் Properties பாருங்கள் உதாரணத்திற்கு கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது இந்த சாப்ட்வேர் மூல்ம் அந்த பைலை தேர்வு செய்யுங்கள்.
இதில் உள்ள Simple Change File Date என்பதனை கிளிக் செய்து தேவையான தேதியை கொண்டுவாருங்கள்.
ஓ.கே. கொடுத்தவுடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.அதற்கும். ஒ.கே. கொடுங்கள்.
இப்போது உங்களது பைலினை திறந்து அதன் Properties பாருங்கள். 
உங்களது பைலின் தேதி மாறிவிட்டிருக்கும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...