Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

பற்கள் பராமரிப்பு

பற்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி...

என பழமொழிக்கு சொல்லுவார்கள்.

நம்மில் பலபேருக்கு பல்தான் தகறாறு.

அந்த காலத்து மனிதர்களை பாருங்கள்

என்பது வயதிலும் அனைத்துப்பல்லும்

உறுதியாக இருக்கும் . மொத்தம் உள்ள

32 பல்களில் ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.

25லிருந்து 30க்குள் தான் இருக்கும். போனது

போகட்டும். இருப்பதையாவது எப்படி

பாதுகாப்பது என பார்ப்போம்.

முதலில் பற்களின் பயன்பாடுகளை

பார்ப்போம்.

1. முகத்திற்கு அழகு சேர்க்க பயன்படுகிறது.

2. அழகான உச்சரிப்பிற்கு பயன்படுகிறது.

3. சிறந்த சிரிப்புக்கு பயன்படுகிறது.

4. உண்ணும் உணவை நன்றாக மென்று

உண்பதற்கு பயன்படுகிறது.


பல்லின் குறுக்கு வெட்டுத்தோற்றம்.






பற்களின் அமைப்பு

1,2 வெட்டுப்பற்கள்.

3- சிங்கப்பல்கள்

4- முதல் கடைவாய்ப்பல்

5- இரண்டாம் கடைவாய்ப்பல்.

20 - பால் பற்களும் 7 வயது முதல் 12 வயது வரை விழுந்து

அந்த இடத்தில் நிலையான பற்கள் முளைக்கின்றன.

நிலையான பற்கள்.




1,2 - வெட்டுப்பற்கள்.

3- சிங்கப்பல்

4- முதல் முன்கடைவாய்ப்பல்

5- இரண்டாம் முன் கடைவாய்ப்பல்.

6- முதல் கடைவாய் பல்.

7- இரண்டாம் கடைவாய் பல்.

8-மூன்றாம் கடைவாய் பல்.


பற்களை பார்த்தோம். இனி அதை பாதுகாப்பது

பற்றி அறிந்துகொள்வோம்.

பற்களை பாதுகாக்கும் வழிகள்.

1.காலையில் ஒருமுறை இரவில் ஒருமுறை

பல்துலக்குதல் வேண்டும்.

2. நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.
3. உணவு உட்கொண்டு முடித்தவுடன் வாயை

கொப்பளித்தல் வேண்டும்.
4. ஆரோக்கியமான பச்சை காய்கறிகள் மற்றும்

நார்ச்சத்து உள்ள உணவு வகைகளை சாப்பிடுதல்

வேண்டும்.
5. இனிப்பு - சாக்லேட் மற்றும் பல்லில் ஒட்டும்

உணவுப் பொருட்களை சாப்பிடாமல் தவிர்த்தல்

வேண்டும்.





6. ப்ளுரைட் கலந்த தரமான பற்பசையை

பயன்படுத்துதல் வேண்டும்.

7. ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை

அணுகி பல்லை பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.




பாராமரிப்பற்ற,நோய்கள் நிரம்பிய

வாய் மற்றும் பற்கள்.



நன்கு பராமரிக்கப்பட்ட ஆரோக்கியமான வாய்

மற்றும் பற்கள்.


பற்களில் வரும் பொதுவான நோய்கள்.







பற்களில் நோய் வரக்காரணங்கள்

1. பற்களை முறையாக துலக்கி சுத்தமாக

வைக்காமல் இருப்பது.

2. ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள்.

அதிகமான இனிப்பு உண்பது.

சுத்தமில்லாத உணவு வகைகள்.

3. தவறான வேலைகளுக்கு பற்களை

பயன்படுத்துவது. (பல்லால் பாட்டில் திறப்பது உட்பட)

4. விபத்தால் பல்(முன் பற்கள்) உடைந்து போவது.

5. உடலில் வரும் மற்ற நோய்கள் மற்றும்

நிலைகளினால் பல்லில் ஏற்படும் பாதிப்பு.

(உதாரணம்:- சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு

வரும் பல் பிரச்சனைகள்).

பல் மருத்துவரால் செய்யப்படும் முக்கிய சிகிச்சை.

பொதுவான ஆரம்ப நிலை சிகிச்சைகள்.


1. சொத்தை வருவதற்கு முன்பாகவே பற்களை

சுத்தம் செய்து சொத்தை வராமல் அடைத்தல்.

(Pit and fissure sealant)


2. பற்களை உறுதிப்படுத்த ப்ளுரைடு ஜெல்லை

பற்களின் மேல் செலுத்துதல்.
3. ஆரம்ப நிலையில் உள்ள சொத்தையை சுத்தம்

செய்து அடைத்தல்.(filling)
4. பற்களின் மேல் படிந்துள்ள காரைகளை சுத்தம்

செய்தல்(Scaling)

கரைகளை சுத்தம் செய்தல். (Scaling)


நோய் முற்றிய நிலையில் செய்ய வேண்டிய

சிகிச்சைகள்.

1. பல்லை எடுத்தல்.

2. செயற்கை பல்லை அந்த இடத்தில் பொறுத்துதல்.

3. வேர் சிகிச்சை.

4. வேர் அறுவை சிகிச்சை.

5. ஈறு அறுவை சிகிச்சை.


புகையிலை, குட்கா, பான் போன்றவற்றை

பயன்படுததுவதால் " வாய்புற்றுநோய்"

ஏற்படலாம்.


புகையிலையினால் வாயில் ஏற்படும்

ஆரம்பநிலை மாற்றங்கள்.

1. வாயில் எரிச்சல்.

2. வாய் திறக்கும் அளவு குறைந்து போதல்.

3. வலி இல்லாத வெண்படலம்.

4. சிவந்த மேல் அன்னம்(புகைப்பதால் ஏற்படுவது)



பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.


1. பல் கறுப்பு நிறமாக மாறுவது.

2. பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது.

3. குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்

போது கூச்சம் மற்றும் வலி.

4. பல்லில் வலி மற்றும் ஈறுகளில் வீக்கம்.

5. பல்லில் வலி வாயின் வெளிபுறத்திலும்

வீக்கம் இருத்தல்.




குழந்தைகளின் பல் பராமரிப்பு.

1. பால் பற்களை அவை விழும் வரை

பாதுகாப்பது முக்கியம்.

2.. நோய் ஏற்பட்டு பல்லை இழக்க நேரிட்டால்

நிலையான பற்கள் சரியான இடத்தில் முளைப்பது

தடைபடலாம்.

3. இனிப்பு - மிட்டாய் - பிஸ்கேட் - இவற்றின் அளவை

குறைத்துக்கொள்ள வேண்டும்.

4. முதல் பல் முளைத்த நாள் முதல் பல்லை சுத்தம்

செய்ய வேண்டும்.

5. விரலில் அணியக்கூடிய பிரஷ் கொண்டு குழந்தைகளின்

பற்களை சுத்தம் செய்தல் வேண்டும்.

6. காய்கறி மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளை

உட்கொள்ள வேண்டும்.

7. இரவில் படுக்கும் முன் குழந்தைக்கு புட்டிபால்

(சர்க்கரை கலந்த பால்) கொடுக்க கூடாது. அப்படி

கொடுத்தால் எல்லா பால் பற்களுமே சொத்தையில்

சிதையும் வாய்ப்பு உள்ளது.

8. உறக்கப் போகும் முன் குழந்தையின் பற்களை

துலக்கிவிட வேண்டும்.

9. மூன்று மாதத்திற்கு ஒருமுறை குழந்தையை

பல்டாக்டரிடம் காண்பித்து பல்லை பரிசோதனை

செய்து கொள்ளவேண்டும்.

சிறந்த முறையில் பற்களை துலக்குவது எப்படி?




காப்பது சால சிறந்தது. இந்த கட்டுரையை படித்தபின்

நீங்கள் மீண்டும் பல் துலக்குகையில் இந்த கட்டுரை

உங்கள் நினைவுக்கு வந்தால் அது இந்த கட்டுரைக்கு

கிடைத்த வெற்றியே.

பல் பற்றிய படங்களை கொடுத்து

உதவிய நண்பர் டாக்டர்.S.கார்த்திக்.B.D.S., அவர்களுக்கு

நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

வாழ்க வளமுடன்,

வேலன்.



வலைப் பூவில் உதிரிப் பூ
கம்யூட்டரில் பணிபுரியும் சமயம் நெறுக்கு தீனி சாப்பிடுவதை தவிர்க்கவும். உணவுத்துகள்கள் கீ-Board விழுந்து கீ-களை செயலிழக்கும் ஆபத்து உள்ளது.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க

வேலன்:-டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க.

டாக்ஸ்பாரில் நேரத்திற்கு அடுத்ததாக நமது பெயர் 

வந்தால் எப்படி யிருக்கும்? புதிதாக நமது கம்யூட்டரை

பார்ப்பவர்கள் வியந்து போவார்கள். அந்த இடத்தில் 

நமது பெயரையோ - திருமணமாகியிருந்தால் மனைவி

பெயரையோ - திருமணமாகி குழந்தைகள் இருந்தால்

குழந்தைகள் பெயரையோ நாம் அங்கு பதியவைத்து

மற்றவர்களை ஆச்சரியப்படுத்தலாம். இனி அந்த 

இடத்தில் பெயர் எப்படி வரவழைப்பது என பார்க்கலாம்.

முதலில் Start > Control Panel ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.

அதில் கீழ்கண்ட வாறு செய்தி வரும். அதில் உள்ள 
Date,Time , Language and Regional Options தேர்வு செய்யுங்கள்.


மீண்டும் உங்களுக்கு மேற்கண்ட வாறு காலம் தோன்றும்.

அதில் Region and Language Option -ஐ மீண்டும் தேர்வு

 செய்யவும். கீழ்கண்ட காலம் ஒன்று ஓப்பன் ஆகும்.

அதில உள்ள Customise தேர்வு செய்யவும்.
 தேர்வு செய்தால் Customize Regional Option என்ற காலம்

மீண்டும் ஓப்பன் ஆகும். அதில் உள்ள Time என்பதை

தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட காலம் 

ஓப்பன் ஆகும். அதில் AM- மற்றும் PM என்று 

இருக்கும் இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரை 

தட்டச்சு செய்யவும் . பின் Ok - Apply - கொடுத்து வெளி

யேறவும்.
இப்போழுது நீங்கள் டாக்ஸ்பாரில் உள்ள கடிகாரத்தை

பார்த்தால் நேரத்தின் அருகே நீங்கள்  சூட்டிய பெயர்

தெரியவரும். 

இந்த தகவல் புதியவர்களுக்காக.

வாழ்க வளமுடன்,

வேலன்.

வலைப் பூவில் உதிரிப் பூ
உங்களிடம் உள்ள அனைத்து பழைய புகைப்படங்களையும் (கருப்பு – வெள்ளை,கலர்) ஸ்கேனர் மூலம் கணிணியில் பதித்துவைத்துவிடவும். ஸ்கேனர் இல்லாத பட்சத்தில் டிஜிட்டல் கேமரா மூலம் புகைப்படங்களை மீண்டும் புகைப்படமெடுத்து அதை கணிணியில்பதித்து கணிணி மூலம் சி.டி.யாக மாற்றி வைத்துவிடவும். உங்களிடம் உள்ள பழைய புகைப்படங்கள்   பூச்சியினால் அரித்துவிட்டாலும், கலர் மங்கிவிட்டாலும் உங்களிடம் உள்ள சி.டி.மூலம் புதிதாக காப்பி எடுத்துவிடலாம்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-அடோப் ரீடர் தானே படித்து காட்ட


வேலன்:-அடோப் ரீடர் தானே படித்து காட்ட


நாம் பெரும்பாலானவர்கள் பி.டி.எப். பைல்களை

அடோப் ரீடர் மூலம் திறந்து பார்ப்போம். ஆனால் 

அந்த அடோப் ரீடரிலேயே படிக்கும் வசதி இருப்பது

பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. நம்மிடம்

உள்ள கட்டுரைகள், பாடங்கள், டாக்குமென்டுகள் என

பி.டி.எப். பைல்களாக எது எது உள்ளனவோ அது

அனைத்தையும் அடோப் ரீடர் படித்துக்காட்டும்.

பள்ளி , கல்லூரி படிக்கும் மாணவர்கள் இந்த

வசதியை பயன் படுத்துவது மூலம் பாடங்கள் 

எளிதில் மனப்பாடம் ஆகும்.தூய தமிழில் பேசுவது

போல் தூய ஆங்கிலத்தில் அடோப் ரீடர் பேசுவதை

நாம் கேட்கலாம். இனிஇந்த வசதியை எப்படி

பயன்படுத்துவது என பார்க்கலாம்.

முதலில் நீங்கள் படித்துக்காட்டவேண்டிய

பைலை ஓப்பன் செய்துக்கொள்ளவும். பிறகு

அதில் view எனும் காலத்தை தேர்வு செய்யவும்.

உங்களுக்கு கீழ்கண்ட வாறு ஒரு காலம் 

தோன்றும்.

அந்த காலத்தில் கடைசியில் உள்ள Read Out Loud

ஐ செலக்ட் செய்யவும். பின்னர் வரும் உப காலத்தில்

Activate Read Out Loud  அல்லது Shift+Ctrl+Y அழுத்தவும்.

இப்போழுது உங்களுக்கு கீழ்கண்ட வாறு காலம் 

மீண்டும் திறக்கும்.



அதில் நீங்கள் தேர்வு செய்த பக்கம் மட்டும் படித்துக்

காட்ட வேண்டுமா அல்லது மொத்த பக்கங்களையும்

படித்து காட்ட வேண்டுமா என உங்கள் விருப்பத்திற்கு

ஏற்ற வாறு தேர்வு செய்யுங்கள்.



தேர்வு செய்து முடித்ததும் அடோப்ரீடர் உங்களுக்கு 

நீங்கள் தேர்வு செய்த பக்கத்தை படித்துக்காட்ட

ஆரம்பிக்கும். படிப்பதை தற்காலிகமாகநிறுத்தவோ

 அல்லது நிறந்தராமாக நிறுத்தவோ முடியும்.


அடோப் ரீடர் இருந்தும் அதில் இந்த வசதி பற்றி

தெரியாதவர்களுக்காக பதிவிட்டுள்ளேன்.

ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

வலைப் பூவில் உதிரிப் பூ
ப்பவும் சி.டி.யை துடைக்கும் சமயம் நடுவிலிருந்து வெளிவரை பிறகு வெளிப்புறமஇருந்து உள்புறம் வரை துடைக்கவும். வட்ட வட்டமாக
வட்டப்பாதையில் சி.டி.யை துடைக்க கூடாது.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-நில உரிமை நகல் பார்வையிட

வேலன்:-நிலஉரிமை நகல் பார்வையிட



மலைமுழுங்கி மகாதேவன்கள்..



நாம்தூங்கும் போது மட்டும் அல்ல நாம் 

விழித்திருக்கும்போதே நமக்கு பட்டை

நாமம் போட பலர் காத்திருக்கின்றனர்.

சமீபத்திய மலைவிழுங்கி மகாதேவன்கள்

அவர்கள். நீங்கள் சொந்த ஊரிலிருந்து

வெளியூர் அல்லது வெளி மாநிலம்-வெளி

நாடு ஆகிய இடங்களில் பணியில் இருக்கலாம்.

உங்களுக்கு சொந்தமான நிலம் - மனைகள்

உங்கள் சொந்த ஊரில் இருக்கலாம். நீங்கள்

வரும் சமயம் தான் அதை நேரில் சென்று

பார்க்கமுடியும். ஆனால் நீங்கள் இருக்கும்

இடத்திலிருந்தே அந்த இடத்திற்கு அந்த நிமிடத்தில்

நீங்கள் தான் அதிகாரபூர்வமான உரிமையாளர்

என இந்த தளம் உங்களுக்கு உதவலாம்.

நீங்கள் செய்யவேண்டியது உங்கள் நிலம் - மனை

அமைந்துள்ள மாவட்டம் - வட்டம் - தாலுக்கா -

கிராமம் - விவரங்களை குறித்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக உங்கள் வசம் உள்ள பத்திரத்தில்

உள்ள பட்டா எண், சர்வே எண், சர்வே உட்புல எண்

அனைத்தையும்  குறித்துக்கொள்ளுங்கள். பிறகு 

கீழ்கண்ட தளத்தை திறந்து கொள்ளுங்கள்.

பின்னர் உங்களிடம் உள்ள தகவல்களை 

அதற்குரிய காலங்களில் பதிவிடுங்கள்.

உங்களுக்கு கீழ்கண்டவாறு காலங்கள்

வரஆரம்பிக்கும். உதாரணத்திற்கு கீழே

வழிமுறைகளை பதிவிட்டுள்ளேன்.

பயன்படுத்தி பலனடையுங்கள்.

--------------------------------------------------------------------- 

தமிழ் நாடு அரசின் எந்நேரத்திலும்

 எங்கிருந்தும் இணையவழி

 சேவைகளைப் பெற உங்களை

 அன்புடன் வரவேற்கிறோம்.

 தமிழ் நாட்டிலுள்ள விவசாய

 நிலங்களின் நில உரிமை

 (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும்

 அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம்.







நிலப் பதிவேடு - நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்களை பார்வையிட
மாவட்டம்
வட்டம்
கிராமம்
பட்டா எண்
புல எண்
உட்பிரிவு எண்
   குறிப்பு: நகராட்சி, மாநகராட்சி, மற்றும் கிராம நத்தம் இல்லாத நிலங்களுக்கு மட்டும் இச்சேவை பொருந்தும்.





chpikahsh;fs; ngah;






1KDrhkpkfd;ehfg;gd;

நன்செய்புன்செய்மற்றவை

பரப்புதீர்வைபரப்புதீர்வைபரப்புதீர்வை

புலஎண்உட்புரிவுn`f; - Vh;ரூ.பைஷெக்.ஏர்& - ign`f; - Vh;& - ig
311B----0 - 10.500.19----
314----0 - 15.500.29----

--.000 - 26.00.48--.00

 இணைய தள முகவரி:-



உங்கள் கருத்துக்களை பின்னுடமிடுங்கள்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய

விஷயம் என்னவென்றால் மாநகரம்,நகரம் 

மற்றும் கிராமநத்தம் இல்லாத இடங்களுக்கு

மட்டும் பொருந்தும்.

வாழ்க வளமுடன்,

வேலன்.



வலைப் பூவில் உதிரிப் பூ
நீங்கள் உங்கள் கம் யூட்டரில் வாரம் ஒரு முறை டீபிராக்மென்ட் செய்வது உங்கள் கம் யூட்டருக்கு நல்லது.
வாரம் ஒரு முறை உங்கள் நிலத்தின் உரிமை நகல் பார்ப்பது உங்களுக்கு நல்லது.

  
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...