நம்மிடம் உள்ள புகைப்படங்களை போட்டோஷாப் துணையில்லாமல் முப்பரிமான எபெக்ட்களை 3D Image கொண்டுவரலாம். 2 எம்.பி. கொள்ளளவு கொண்டுள்ள இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இங்கு சாதாரண புகைப்படத்தை எடுததுள்ளேன்.
இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு விண்டோ ஓன்று ஓப்பன் ஆகும். அதன் வலதுபுறம் கீழ்கண்ட விண்டோ வரும்.
இதில் முதலில் ஒரு பாக்ஸ் இருக்கும். நமது புகைப்படத்தை சுற்றி வண்ண நிறங்கள் வரவழைக்க. தேவையானல வண்ணங்கள் கொண்டுவரலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். அதற்கு அடுத்துள்ள கட்டத்தை கவனியுங்கள்.
3D Transformation என்று போட்டுள்ள இதில் உள்ள Rotate-ல் உள்ள ஸ்லைடரை நீங்கள் நகர்த்த படமானது வேண்டிய அளவிற்கு திரும்பும். அதைப்போலவே அடுத்துள்ள Curving ஸ்லைடரை நகர்த்த படமானது குவிந்த படியும் - குழிந்த படியும் நமக்கு கிடைக்கும் கீழே உள்ள படங்களை பாருங்கள்.
இதைப்போலவே கடைசியாக உள்ள Scale H நகர்த்துவது மூலம் படமானது அகலத்தில் அதிகமாக மாறும். அடுத்துள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் படத்தின் நான்கு மூலைகளில்கார்னர் டிசைன்களை கொண்டுவரலாம். இதிலி எந்த கார்னர் டிசைன் வேண்டுமோ அதை கிளிக் செய்தால் அந்த டிசைனானது படத்தில் வரும். அதைப்போலவே கார்னர் கீழே நான்கு மூலைகளுக்கான ரேடியோ பட்டன் இருக்கும். படத்தில் உள்ள நான்கு மூலைகளில் எந்த மூலையில் கார்னர் டிசைன் வேண்டுமோ அந்த மூலைக்கான ரேடியோ பட்டனை கிளிக் செய்தால் அந்த மூலையில் டிசைன் வரும். நான் நான்கு மூலைகளிலும் கார்னர்செலக்ட்செய்துள்ளேன்.அடுத்துள்ள விண்டோவினை பாருங்கள்.
ஒரு படத்தில் உள்ள பிரதிபலிப்பை இதில கொண்டுவரலாம். இதில் உள்ள ஸ்லைடர்களை நகர்த்துவது மூலம் அதன் பிரதிபலிப்பை சுலபமாக மாற்றலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதன் உள்ளாக நமது புகைப்படம் - பெயர்கள் கொண்டுவரலாம் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
டிசைன்செய்த போட்டோக்களை வேண்டிய பார்மெட்டில் மாற்றி தனியே போல்டரில் போட்டு வைக்கலாம்.போட்டோஸ்டுடியோ வைத்திருப்பவர்கள் போட்டோஆல்பத்தின் நடுவில இதுபோல டிசைன்களை சேர்த்தால் வித்தியாசமாக இருக்கும்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
மறக்காமல் ஒட்டுபோட்டு செல்லுங்கள். அதனால் மேலும் பலர் இந்த சாப்ட்வேர் பற்றி அறிய வாய்ப்பாக அமையும்.நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.
சற்று முன் கிடைத்த தகவல்-
திரு.முஹமது நியாஜ் அவர்கள் பதிவிறக்கம் செய்வதில சிரமம் இருப்பதாக சொன்னார்.4 Shared.com ல் பதிவிறக்க சிரமமாக இருந்தால் ரபிட்ஷேரில் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்