ஹலோ...ஹலோ....கொஞ்சம் இருங்க...என்னடா இவன் இப்போதான் பதிவுலகுக்கு வந்தான். இதற்குள் இவனுக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டுட்டாங்களே என நினைக்கவேண்டாம்.இன்று நாம் சாதாரண மனிதர்களாக இருக்கலாம். நாளையே நாம் நாடு போற்றும் பெரிய மனிதர்களாக மாறி நமக்காக சிறப்பு தபால்தலை வெளியிட்டால் எப்படி இருக்கும்.நமது கற்பனையை போட்டோஷாப் மூலம் செயல்படுத்தலாம். போட்டோஷாப் திறந்துகொள்ளுங்கள். இந்த ஸ்டாம்ப் ஆக்ஷனை இங்குகிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.போட்டோஷாப்பினுள் லோடு அக்ஷன் மூலம் அதனை கொண்டுவந்துவிடுங்கள்.(முந்தைய போட்டோஷாப் பதிவில் இதைப்பற்றி போட்டுள்ளேன்)இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
இதில் இரண்டு மாடல்களில் ஸ்டாம்கள் உள்ளது. இதில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்யுங்கள். பின்னர் நீங்கள் விரும்பும் படத்தை தேர்வு செய்யுங்கள்.
படம் தேர்வானதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கு விருப்பமான பெயரை தட்டச்சு செய்துகொள்ளுங்கள். மீண்டும் அக்ஷனை கிளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் விரும்பும் தேதியை நிரப்பிக்கொள்ளுங்கள்.இந்த தேதிதான் உங்கள் ஸ்டாம்பில் முத்திரை தேதியாக வரும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் தேதியை தேவையான இடத்திற்கு நகர்த்திக்கொள்ளுங்கள்..
மீண்டும் கிளிக் செய்து இறுதியாக ஸ்டாப் வரும் வரை ஓ.கே. தாருங்கள். கீழே வந்துள்ள Stamp புகைப்படம்
நாளைய பிரபலங்கள்-
என்னங்க....சிறப்பு அஞ்சல்தலை யை போட்டோஷாப்பில் கொண்டுவரு வதை பார்த்திங்களா...இப்போ முத்திரை குத்துவதாக நினைத்து உங்க ஓட்டை குத்திட்டுபோங்க...நாளை சந்திப்போம்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்