Showing posts with label மின்தடை.power cut.electricity.tneb.. Show all posts
Showing posts with label மின்தடை.power cut.electricity.tneb.. Show all posts

வேலன்:-மின்தடை.

இரண்டு மணி நேரத்தில் ஆரம்பித்த மின்தடை இன்று 12 மணிநேரம் வரை வந்து நிற்கின்றது.உண்மை நிலவரத்திற்கும் பத்திரிக்கை செய்திகளுக்கும் 8 மணிநேர வித்தியாசம் உள்ளது. சென்னையில் 2 மணி நேரமும் மற்ற மாவட்டங்களில் 4 மணிநேரமும் மின்தடை உள்ளதாக பத்திரிக்கைகளில் சொல்கின்றார்கள். ஆனால் காலை 9 மணி முதல் 12 மணி வரையும்,மதியம் 3 மணியிலிருந்து 6 மணி வரையிலும்,இரவு 7 முதல் 8 வரை. மீண்டும் 9 லிருந்து 10 வரை, நள்ளிரவு 12 மணியிலிருந்து நடுஇரவு 1 மணி வரை,அதிகாலை 3 மணியிலிருந்து 4 வரை, விடியற்காலை 5 மணியிலிருந்து 6 வரை மின்தடை செய்கின்றார்கள்.மின்சார தேவையிருப்பவர்கள் ஒருபுறம் என்றால் அதையே தொழிலாக கொண்டு இருப்பவர்கள் நிலமை என்ன ஆவது? 
ஒரு படத்தில் நாகேஷ் ஜோதிடகாரராக இருப்பார்..அவரிடம் ஒருவர் ஜாதக பலன் பற்றி கேட்பார்..உங்களுக்கு கஷ்ட நேரம் 6 மாதம் வரைதான் என்பார்..அதற்கு பிறகு என பலன் கேட்க வந்தவர் கேட்பார்..உங்களுக்கு அதுவே பழகிவிடும் என்பாரர்..அதைப்போலவே
இரண்டு மாதம் வரைதான் நமக்கு மின்தடை பற்றியஇந்த கஷ்டம்...பிறகு...அதுவே நமக்கு பழகிவிடும்.தொலைதொடர்பில் மட்டும் எங்கள் ஊரினை சென்னையில் இணைத்து உள்ளார்கள். இரண்டு ஊருக்கும் ஒரே எஸ்டிடி பின்கோடுதான். ஆனால் மின்சார பயன்பாட்டில்..எங்களுக்கு 12 மணி நேரம்...சென்னையில் 2 மணி நேரம்...
சில சிக்கன நடவடிக்கையை அரசாங்கம் எடுப்பதுமூலம் ஒரளவு மின்தேவையை சமாளிக்கலாம்.
1.வீதியெங்கும் டியுப்லைட் கட்டி அரசியல் மீட்டிங் நடத்துவதை கட்டுபடுத்தலாம்.
2.திருமண மண்டபங்களில் இரவு முழுவதும் எரியும் சீரியல் விளங்குகளையும் தேவையில்லாத மின்விளக்குகளையும் அணைத்துவிடலாம்.
3.மின்திருட்டு எங்கு நடந்தாலும் அதைப்பற்றி தகவல் தருபவர்களுக்கு -தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் வசூலிக்கும்அபராத தொகையில் 10 சதவீதம் வெகுமதியாக கொடுக்கலாம்.
4.இப்போது வெயில் நேரம்.மாலை 6.30 வரை சூரியன் வெளிச்சம் இருக்கும். 5 மணிக்கே தெருவிளக்குகளை போடுவதை தவிர்த்து 6.30 மணிக்கு போடலாம்.
5.தொடர்ச்சியாக எரியும் தெருவிளக்குகளுக்கு பதில் ஒன்றுவிட்டு ஒன்று எரியவிடலாம்.(இருளோ என்று இருப்பதற்கு ஒரளவுக்கு வெளிச்சம் மேல் இல்லையா)
6.வீடுகளில் ஏ.சி.உபயோகிப்பவர்கள் 1 மணிநேரம் ஏ.சி.யை ஓடவிட்டு பின்னர் நிறுத்திவிட்டு பேனை உபயோகிக்கலாம்.(இன்று மின்- பற்றாக்குறை ஏற்பட அனைத்து வீடுகளிலும் ஏ.சி.உள்ளதும் ஒரு காரணம்)
7.சோலார் மூலம் தயாரிக்கும் உபகரணங்களுக்கு அரசு மானியம் தந்து ஊக்குவிக்கலாம்.
8.வீடு-ஹோட்டல்களில் வாட்டர் ஷீட்டர் உபயோகிப்பதை தவிர்த்து சோலார் வாட்டர் ஷீட்டரை உபயோகிக்கலாம்.
9.பெரிய பெரிய துணிகடை -பாத்திர கடை - நகை கடைகளில் வீணாக எரியவிடும் விளக்குகளின் வெளிச்சத்தை பாதியாக குறைக்கலாம்.
10.ஒரு யூனிட் மின்சாரம் 17 ரூபாய் வரை ஆகின்றது. தடையில்லா மின்சாரத்திற்கு அக்ரிமெண்ட் போட்டுள்ள தொழிற்சாலைகளுக்கு 1 யூனிட் 5 ரூபாய்க்கு கொடுப்பபதற்கு பதில் நாம் வாங்கும் தொகையான 17 ரூபாயே வசூலிக்கலாம்.இதனால் மின்சார வாரியம் ஒரளவாவது நஷ்டத்திலிருந்து மீளலாம்.
மேலே சொன்ன யோசனையெல்லாம் கனவில் தோன்றியது அல்ல...கரண்ட் இல்லாமல் - தூக்கமும் இல்லாமல் கொசுக்கடியில் தோன்றிய யோசனைகள்.
கடைசியாக மின்தடை பற்றிய எஸ்எம்எஸ் நகைச்சுவை ஒன்று...
முதல் நபர்:- வீட்டில் உள்ள ஸ்விட்ச்போர்டை தண்ணீர் விட்டு கழுவிக்கொண்டு இருக்கின்றார்..
இரண்டாவது நபர்:- எங்க...பார்த்து கரண்ட் ஷாக் அடிக்கபோகின்றது.
முதல் நபர்:- நீங்கள் வெளிஊர் ஆளா?
இரண்டாவது நபர்:- அட ...எப்படி கண்டுபிடித்தீர்கள்.
முதல் நபர்:-அதனால்தான் தமிழ்நாட்டு கரண்ட் பற்றி உங்களுக்கு தெரியவில்லை..


வாழ்க தடையில்லா மின்சாரத்துடன்.
வேலன்.


பின்குறிப்பு:-தொடர்ந்த மின்தடையால் பதிவுகள் எழுதமுடியவில்லை. இப்பொது மின்தடைக்கு ஏற்ப நேரத்தை உபயோகிக்க ஓரளவுக்கு பழகிக்கொண்டேன்.பதிவுகள் தொடரும்... 



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...