வேலன்:-ஆறுமொழிகளின் மொழிபெயர்ப்பை உடனடியாக அறிந்துகொள்ள
ஓரே சமயத்தில் நீங்கள் ஐந்துமொழிகளில் பொருட்களின் அர்த்தங்கள் அறிய வேண்டுமா? ரொம்ப சுலபம் 350 கே..பி. அள்வுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை இங்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஆங்கிலத்திற்கு எதிரில் உள்ள கட்டத்தில நீங்கள் விரும்பும் ஆங்கில சொல்லினை தட்டச்சு செய்யவும்.அதற்கு இணைய மற்ற மொழி சொற்கள் கீழே இடம்பெறுவதை காணுங்கள். நான்கம்யூட்டர் என தட்டச்சு செய்துள்ளேன்..சில சொற்கள் சரியான வார்ததைகளில் இல்லாதிருப்பின் அதற்கு இணையான ஆங்கில சொற்கள் உங்களுக்கு பாப்அப்மெனுவாக விரிவடையும்.தேவையான ஆங்கில சொல்லை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள் நான் velan என தட்டச்சு செய்துள்ளேன்.அது சரியான வார்த்தைஇல்லாததால் அந்த வார்த்தைக்கு இணையான சொற்கள் வந்துள்ளதை கவனியுங்கள்.
ஆங்கிலம் தவிர்த்து உங்களுக்கு இதர மொழிகள் தான் தெரியும் என்றால் இதில் உள்ள Source கிளிக் செய்து தேவையான மொழியை முதல் மொழியாக மாற்றிக்கொள்ளலாம்.
இனி நீங்கள் ஜெர்மெனி.ப்ரான்ஸ்.ஸ்பெனிஷ்.இட்டாலியன் ஆகிய மொழிகளில் வல்லவராவது நிச்சயம்.பயன்படுத்திப்பாருங்கள் .கருத்துக்களை கூறுங்கள்.வாழ்கவளமுடன்.
வேலன்.