டிக்ஷனரி மற்றும் மொழி மாற்றம் செய்திட இந்த சாப்ட்வெர் பயன்படுகின்றது. 11 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நாம் இதில் எந்த வார்த்தைக்கு விளக்கம் தேவையோ அந்த வார்த்தையை இதில் தட்டச்சு செய்யவும். அதற்கான விரிவான விளக்கம் நமக்கு உடனே கிடைக்கும்.மேலும் அது சம்மந்தமான தொடர்புடைய வார்த்தைகளும் நமக்கு அதன் அருகிலேயே விரிவாக கிடைக்கும். கீழே உள்ள விண்டூவில் பாருங்கள்.மேலும் நாம் தேர்வு செய்த வார்தைக்கான மொழி உச்சரிப்பை ஒலி வடிவில் கேட்கலாம். இதில் மேற்புறம் உள்ள சின்ன ஐகானில் கிளிக் செய்திட நமக்கான ஒலி கிடைக்கும். மேலும் நமது வார்தைக்கான சரியான இதர மொழி களில் நமக்கான வார்த்தைக்கான மொழியாக மாற்றிக்கொள்ளலாம். நான் கம்யூட்டர் என்பதனை இந்தியில்எவ்வாறு வரும் என தட்டச்சு செய்தேன். எனக்கு கீழ்கண்ட வாறு விண்டோ தோன்றியது.
மேலும் இதில்உள்ள Appendices Options கிளிக் செய்திட நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Currency Converter.International Dialog Codes.Time Zone Converters.Currency Converts என பலவிதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். நமக்கு எது தேவையோ அதனை இதன் மூலமாக இன்ஸ்டால்செய்துகொள்ளலாம்.
பல்வேறு நாடுகளின் கரன்சி மற்றும் மொழியை கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதன் மூலம் நமக்கு Irregular Verbs அறிந்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பல்வேறு நாடுகளின் அப்போதைய உலக நேரத்தினை இதன் மூலம் எளிதில் அறிந்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
உலோகங்களின் பெயர்.அதன் எண்.அதன் கோட்;.அதன் எடை.அது உருகும் தன்மை என பல்வேறு உலோகங்களை எளிதில் அறிந்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ஒரு சின்ன சாப்ட்வேரில் பல்வேறு வசதிகள் உள்ள தால் மாணவர்களுக்கு இது பெரிதும் பயன்தரும். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.