சமீபத்தில் டாக்டர் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். ஒரு பேஷண்டை வீட்டில் சென்று அப்போதுதான் வந்திருந்தார். என்ன சார்-பேஷண்ட்டுக்கு பிரச்சனை என்றேன. பிரஷர் அதிகமாகிவிட்டது-அதனால் தலை சுற்றுகின்றது என்று கூறினார். என்ன செய்தீர்கள் என கேட்டேன்.மாத்திரை கொடுத்து இரவு முழுவதும் முதுகை பார்த்துக்கொண்டிருங்கள் சரியாகிவிடும் என்று கூறியதாக கூறினார். எனக்கு முதலில் ஓன்றும் புரியவில்லை. பிரஷருக்கும் முதுகை பார்த்துக்கொணடிருப்பதற்கும் என்ன சம்பந்தம் என கேட்டேன்.அவர்கள்தான் தலை சுற்றுகின்றது என்று கூறினார்களே அதனால் முதுகை பார்த்துக்கொண்டிருங்கள் என நகைச்சுவையாக கூறியதாக சொன்னார். சரி பதிவிற்கு வருவோம். நமது மானிட்டருக்கும் பிரஷர் வந்தால் என்ன ஆகும். இந்த வலைதளம் சென்று இங்கு கிளிக் செய்தீர்களே யானால் உங்கள் மானிட்டருக்கும் பிரஷர் வந்து சுற்ற ஆரம்பிக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
வாழ்க வளமுடன;..
வேலன்.