கணிணி பயன்படுத்துகையில் குறிப்பிட்ட நேரம் ஆனதும் தானே நின்றுவிடவும். ரீ ஸ்டார்ட் ஆகிவிடவும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பிகொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங் குகிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ரீஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். இதில் எவ்வளவு நேரம் கழித்து உங்களுடைய கணிணி ரீஸ்டார்ட் ஆகவேண்டுமோ அந்த நேரத்தினை செட் செய்திடவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.அதுபோல எவ்வளவு நேரம் கழித்து உங்கள் கணிணி நின்றுவிடவேண்டுமோ அந்த நேரத்தினை செட் செய்திடலாம்.
குறிப்பிட்ட நேரம் ஆனதும் உங்களுடைய கணிணி நீங்கள் செட் செய்தவாறு ரீஸ்டார்ட் ஆவதும் நின்றுவிடவும் செய்யும். இதன் மூலம் நாம் கணிணியின் வேலையை சுலபமாக முடித்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்..
வாழ்க வளமுடன்
வேலன்.