கம்யூட்டரில் பணிபுரிந்துகொண்டு இருப்போம். அலுவலகம் செல்லும் அவசரத்தில் கம்யூட்டரை ஷட்டவுண்செய்திட மறந்துவிடுவோம்.அவ்வாறான குறையை நிவரத்தி செய்ய குறிப்பிட்ட நேரத்தில் கம்யூட்டர் தானே நின்றுவிட
சின்ன சாப்ட்வேர் உள்ளது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Shut Down. Log Off.Stand by. Hibernate என பல ரேடியோ பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். தேவையானதை தேர்வு செய்யவும்.. அடுத்தது எந்த நேரத்தில் கம்யூட்டர் நின்றுவிடவேண்டும் என நினைக்கின்றோமோ அந்த நேரத்தை தேர்வு செய்யவும்.குறிப்பிட்ட நாளில் குறிபிட்ட நேரத்தில் நின்று விடவேண்டுமா அதனையும் நாம் தேர்வு செய்யலாம். இவை அனைத்தையும் தேர்வு செய்துபின்னர் இதில் உள்ள Start task கிளிக் செய்யவும். அவ்வளவுதான். இனி நீங்கள் மற்ற பணிகளை பார்க்கலாம். குறிப்பிட்ட நேரம் வந்ததும் உங்கள் கம்யூட்டர் தானே நின்றுவிடும். பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள்.வாழ்க வளமுடன்
வேலன்.