Showing posts with label வேலன்.க.கணபதி.தந்தை.அஞ்சலி.velan.father.m.k.ganapathy. Show all posts
Showing posts with label வேலன்.க.கணபதி.தந்தை.அஞ்சலி.velan.father.m.k.ganapathy. Show all posts

வேலன்:-எங்கள் தந்தைக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலி....



அப்பா என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமாய்
வாழ்ந்த உங்களுக்கு எங்கள் ஊன் ,உடல் ,வாழ்க்கை,
மலராய் சமர்ப்பிக்கிறேன் !
நான் பிறந்தது முதல் தங்கள்
மூச்சுகாற்று-
19.10.2011 -பிரியும்வரை-எங்கள் சுவாசமாய்
வாழ்ந்த தந்தையே !
உங்களுக்கு எங்கள் கண்ணீரை அஞ்சலியாக அர்பணிக்கின்றோம்!

ஒருவர் வாழ்வில் நல்ல தந்தையாக எவ்வாறு
வாழவேண்டும் என்று முன்னுதாரனமாய்
நல்ல தந்தையாக வாழ்ந்து காட்டிய உங்களுக்கு
எங்கள் கண்ணீரை அஞ்சலியாக்குகின்றோம் .

நீங்கள் எங்களுக்கு நல்ல தந்தையாக மட்டுமின்றி
நல்ல ஆசிரியராகவும் ,ஒழுக்கம்,கட்டுப்பாடு ,
உதவும் மனப்பான்மை ,விட்டு கொடுத்து வாழ்தல் .
நன்றி மறவாமை ,பிறரை மதித்து வாழ்தல்,துன்பம் வரும்வேளையிலும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளுதல் ,மற்றும்
அனேக விசயங்களை எங்கள் தோழனாய்
எங்கள் தோள்மீது
கை போட்டு கற்றுகொடுத்த
தந்தை எனும்
எங்கள்  உயிர் தோழனை நாங்கள் இழந்து தவிக்கிறோம் .

காற்றில் கலந்த எங்கள் உயிர் தோழனே !
உன்னை காற்றில் தேடி அலைகின்றோம் !
என் உடலில் தோள்கள் இருந்ததை தங்கள்
இழப்பிற்கு பின் தான் உணர்ந்தோம் !
ஏனென்றால் எங்கள் தோள்கள் மீது பாரம்
ஒரு நாளும்
நான் உணர நீங்கள் வாய்ப்பு அளிக்கவில்லையே !

ஒளி நட்
த்திரமாய் வெளிச்சம் கொடுத்த உங்களை !
இறுதி சடங்கு என்ற பெயரில் உங்கள் உடலை எங்கள் கைகளால்
அக்னி பிழம்புக்கு ஒப்படைத்த போது ,
பூமி உருண்டை
எங்கள் கால்களை விட்டு விலகி சென்றது !
மறு நாள் சிறு குடுவைக்குள் உங்களை சாம்பலாய்
பெற்றுகொண்டபோது எங்கள் மனம்
எரிமலையாய் அக்னி
பிழம்பாய்
வெடித்து சிதறியது .எங்களை மன்னிப்பீர்களா தந்தையே !



அடுத்தவேளை உணவுக்கு  வழியில்லாமல் வந்தவருக்கு உதவிட இடம்கொடுத்த உத்தமரே.இடம் கொடுத்தால் மடத்தை பிடுங்கும் இனப்பிறவிகள் அவர்கள் என்பது உங்களுக்குபுரியாதது ஏன்?
நல்லவர்களை இறைவன் கைவிடுவதில்லை....நீதி இறுதியில் வெல்லும்.உங்கள் ஆன்மா நிம்மதி அடையட்டும்.

வாழ்நாளில் நாங்கள் அறியாமல் தவறு செய்திருந்தால்
எங்களை மன்னிக்கவும் ,
எங்களை விட்டு உடலால் பிரிந்தாலும்
எங்கள் மூச்சு கற்றாய் உங்கள் நினைவுகளுடன் வாழ்வோம்.
தங்கள் மலர் பாதங்களை வணங்கி மலர்களை சமர்பித்து வணங்குகிறோம்,,,,,,,,,,




அன்பு மகன்கள்.....
க.மூர்த்தி.
க.சரவணன்.
க.வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...