நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை நாம் டிவிடியாக மாற்றவும்,வீடியோ பைல்களை பதிவிறக்கம் செய்து டிவிடியாக மாற்றவும் இந்த டசாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இணைய வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட அதன் யூஆர்எல் முகவரியை இதில் உள்ள விண்டோவில் பேஸ்ட் செய்திடவும். பின்னர் இதில் உள்ள அனலைஸ் கிளிக்செய்திடவும். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் வீடியோவானது இதில் பதிவிறக்கமாகி இருக்கும்.
வீடியோ பைல்களை சிடியா டிவிடி யா என முடிவு செய்திடவும். மாற்ங்கள் ஏதும் செய்ய விரும்பினால் செய்திடவும். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்
டிவிடியின் முகப்பிற்கு ஏற்ப டெம்ப்ளேட்டுக்களை தேர்வு செய்திடவும்
வீடியோவில் பின்புற இசையை மாற்றுவதானால் மாற்றலாம் மேலும் பின்புல நிறங்களையும மாறறலாம் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இறுதியாக நீங்கள் உங்கள் வீடியொவினை டிவிடியாக மாற்றவதானால் டிவிடி டிரைவில் டிவிடியை போட்டே ஓ.கே.தாருங்கள். நீங்கள் வீடியோவினை ஐஎஸ்ஓ பைல்களாக மாற்றவிரும்பினால் அதற்குரிய ரேடியொ பட்டனை கிளிக் செய்திடுங்கள்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் வீடியோவானது டிவிடியாக மாறியிருப்பதை காணலாம். பயன்படுததிப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.