டெக்ஸ்டாப்பில் நாம் நமது புகைப்படங்களை வைத்திருப்போம். ஆனால் விதவிதமான ப்ரேம் செய்த புகைப்படங்கள் வைத்திருப்போமா? கிடையாது.டெக்ஸ்டாப்பில் நமது புகைப்படங்களை விதவிதமான ப்ரேம் செய்து வேண்டிய இடங்களில் நகர்த்தி வைத்துக்கொள்ளலாம். 13 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ப்ரேம் கிளிக்செய்ய உங்களுக்கு விதவிதமான ப்ரேம்கள் கிடைக்கும். தேவையானதை கிளிக் செய்யவும்.
அதைப்போல் வலதுகை பக்கத்தில் உள்ள Photo - Open-கிளிக் செய்து உங்களது புகைப்படத்தை தேர்வு செய்யவும்.புகைப்படத்திலேயே கலர் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.மேலும் புகைபடத்தை பழைய படமாக மாற்றவோ - நிழல்படமாக மாற்றவோ செய்துகொள்ளலாம்.தேவையான வார்த்தைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.அதற்கான வசதி இதன் கீழேயே கொடுக்கப்பட்டுள்ளது.
இப்போது நடுவில் நீங்கள் தேர்வு செய்த புகைப்படம் வந்துவிட்டிருக்கும். அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவது மூலம் படத்தை நேராகவோ சாய்ந்தோ வைக்கலாம்.
இறுதியாக கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும். இப்போது டெக்ஸ்ட்டாப்பில் சென்று பார்த்தீர்களேயானால் உங்களது புகைப்படம் நீங்கள் தேர்வு செய்த புகைபடத்துடன் வந்திருக்கும்.
படத்தை தேவையான இடத்திற்கு நகர்த்தி வைத்துக்கொள்ளவும் தேவையானால் மறைத்தும் வைத்துக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.