புகைப்படங்களை விரைவாக பார்வையிட.மாற்றங்கள் செய்ய.இன்னிசையுடன் ஸ்லைட்ஷோவாக பார்வையிட இந்த சாப்ட்வேர் உதவுகின்றது.2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் புகைப்படத்தை தேர்வு செய்யவும்.
இதன் மேல்புறம் வரிசையாக டூல்கள் இருக்கும். இதில் உள்ள கிராப் டூல் மூலம் வேண்டிய அளவில் கட் செய்துகொள்ளலாம்.
ரீ-சைஸில் வேண்டிய அளவுகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் உள்ள அருமையான வசதி என்றால் அதை ஸ்லைட்ஷோ என சொல்லலாம்.
இதில் உள்ள Transitional Effects (கீழிருந்து இரண்டாவதாக உள்ளது பாருங்கள்) ல் மொத்தம் 156 எபெக்ட்கள் உள்ளது.ப்ரிவியு பார்க்கும் வசதி உள்ளதால் அதனை ப்ரிவியுவாக பார்க்கலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் உள்ள செட்டிங்ஸ் பட்டனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் என்னற்ற டேப்புகள் உள்ளது. எந்த வசதி தேவையோ அதற்கான செட்டிங்ஸ் செய்தால் போதுமானது.
விரும்பிய படத்தை இ-மெயில் அனுப்பவும். நேரடியாக பிரிண்ட எடுக்கவும் முடியும். தவிர பெயிண்ட் ப்ரோகிராமில் செய்யும் பணிகளையும் இதில் எளிமையாக செய்யலாம்.வார்த்தைகளை சேர்த்தல்.நிறம் மாற்றுதல்.பார்மெட் மாற்றுதல் மற்றும் முழு திரை காணும் வசதி என இதில் உள்ள வசதிகள் ஏராளம்.தாராளம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.