சிறு வயதில் ஒரே மாதிரியான காலி டப்பாக்களை அடிக்கி வைத்து கீழே சரிந்துவிடாமல் ஒவ்வொன்றாக எடுக்கவேண்டும். யார் அதிக டப்பாக்களை கீழே விழாமல்எடுக்கின்றார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்களாவார்கள்.அதைப்போலவே இந்த சின்ன சாப்ட்வேரில் அந்த விளையாட்டினை விளையாடலாம். 25 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள பாக்ஸில் கிளிக் செய்ய பாக்ஸ் வெடித்து சிதறும். பச்சை நிற பாக்ஸ் ஒவ்வொன்றாக கீழே இறங்கும். அதே சமயம் கீழே சிதறிவிடாமலும் பார்க்க வேண்டும்.ஒவ்வொரு நிலையாக செல்ல செல்ல ஆர்வம் நமக்கு அதிகரிக்கும்.குழந்தைகளுக்கு விளையாட கொடுங்கள். நீங்களும் விளையாடி பாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.