வேலன்:-பைல்கள் டெலிட் ஆகும்முன் நம்மிடம் அனுமதி பெற
வீடுகளில் குப்பைகளை பெருக்கி வெளியில் கொட்டும்முன் ஒருமுறை பார்த்துக்கொட்டுதல் நல்லது.சமயங்களில் முக்கியமான பொருள்களும் குப்பையில் சென்றுவிடும்.அதைப்போல நாம் கணிணியில் பைல்களை டெலீட் செய்யும் முன் கணிணி நம்மிடம் அனுமதி கேட்டு பின்னர் டெலிட் செய்தல் நலமே.வழக்கமாக இந்த செட்டிங் கணிணியில் இருக்கும்.தவறுதலாக இந்த செட்டிங் மாறிவிட்டால் நாம் பைல்களை டெலிட் செய்யும் சமயம் நம்மிடம் அனுமதி கேட்காமலேயே பைல்கள் ரீ-சைக்கிள் பின்னுக்கு சென்றுவிடும். இதனை தவிர்க்க -ஒவ்வொருமுறையும் நாம் டெலிட் செய்கையில் நம்மிடம் அனுமதி கேட்டு டெலிட் ஆவதுபோல் செட் செய்யலாம்.அதற்கு நீங்கள் ரீ-சைக்கிள் பின் ரைட் கிளிக் செய்து ப்ராபர்டீஸ் தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.
அதில் Global என்பதனை தேர்வு செய்யுங்கள்.வரும் விண்டோவில் Display delete confirmation dialog என்பதின் எதிரில் உள்ள கட்டத்தில் டிக் செய்து பின்னர் Apply -Ok செய்யுங்கள். இப்போது ஏதாவது ஒரு பைலை டெலிட் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.Yes அழுத்துங்கள். இனி நீங்கள் எந்த பைலை டெலிட் செய்தாலும் உங்களிடம் அனுமதி கேட்டே பைல்கள் ரீ-சைக்கிள் பின்னுக்கு செல்லும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.