புகைப்படங்களில் மாற்றங்கள் செய்ய - வாட்டர் மார்க் செய்ய - எழுத்துருக்கள் சேர்க்க -பார்மெட் மாற்ற என பல வேலைகளை செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு வரும்விண்டோவில் தேவையான போல்டரை தேர்வு செய்யவும்.
இதில் வாட்டர் மார்க்காக இதில் எழுத்துக்கள் எங்குவரவேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்யலாம்.கீ ழே உள்ள விண்டோவில பாருங்கள்.தேர்வு செய்யும் புகைப்படத்தை தேவைக்கு ஏற்ப வேண்டியவாறு மாற்றிக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
படங்களை நாம் தம்ப்நேயில் வியுவிலோ -Pane.Gallery.Details எனஎதுவிருப்பமோ அதில் பார்க்கலாம்.கீழே உள்ள விண்டோவில்பாருங்கள்.
இதன் வலதுபுறம் நீங்கள் எந்த பணிசேய்யப்போகின்றீர்களோ அந்த ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளலாம்.
படங்களை பார்மெட் மாற்றும் வசதியும் உள்ளது. பயன்படுத்திப்பர்ருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.வாழ்க வளமுடன்
வேலன்.