Showing posts with label வேலன்.யூடியூப்.வீடியோ.ஆடியோ.கிளிப்.பாடல்.velan;.video.audio.clip.movie.songs.. Show all posts
Showing posts with label வேலன்.யூடியூப்.வீடியோ.ஆடியோ.கிளிப்.பாடல்.velan;.video.audio.clip.movie.songs.. Show all posts

வேலன்:-யூடியூப் வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க

ஒரு வீடியோவில் குறிப்பிட்ட பகுதி வேண்டும் என்றால் நாம் வீடியோ கட்டரை பயன்படுத்தி தேவையான பகுதியை மட்டும்வெட்டி எடுத்துக்கொள்ளலாம். ஆனால் யூடியூப் வீடியோவில் தேவையான பகுதியை மட்டும் வெட்டி எடுக்க வேண்டும் என்றால் முழு வீடியொவினையும் நாம் பதிவிறக்கம் செய்து பின்னர் தேவையான பகுதியை மட்டும் வெட்டி எடுக்கவேண்டும். ஆனால் இந்த இணையதளத்தில் நீங்கள் யூடியூப் வீடியோவில் எந்த பகுதி-பாடலோ.நடனமோ.சண்டைக்காட்சியோ.நகைச்சுவையோ என எது தேவையோ அதனை மட்டும் வெட்டி எடுத்துக்கொள்ளலாம்.இந்த இணையதளம் காண http://www.clipconverter.cc/  இங்கு செல்லவும். இந்த இணையதளம் ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கான யூடியூப் வீடியோ  யூஆர்எல் முகவரியை காப்பி பேஸ்ட் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

நீங்கள் பதிவிறக்கம் செய்யவேண்டியது ஆடியோவா வீடியோ என முடிவு செய்யவும். பின்னர் இதில ஆடியோவாக இருந்தால் MP3.M4A.AAC   இதில் எந்த பார்மேட் வேண்டுமோ அதனையும் வீடியோவாக இருந்தால் MP4.AVI.3GP.MOV.MKV இதில் எந்த பார்மெட் வேண்டுமோ அதனையும் தேர்வு செய்யவும்.பின்னர் இதில் உள்ள கன்வர்ட் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் உள்ள ஸ்டார்ட் என்பதில் வீடியோவின் எந்த பகுதி வேண்டுமோ அந்த இடத்தின் ஆரம்ப பகுதியை குறிப்பிடவும். பின்னர் முடிவு பகுதியில் எந்த இடத்தில் உங்களுக்கு வீடியொ முடிய வேண்டுமொ அந்த இடத்தினை குறிப்பிடவும்.


இதில் உள்ள கன்வர்ட் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 
டவுண்லோடு பணி முடிந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் டவுண்லோடு என்பதனை கிளிக் செய்து டவுண்லோடு பைல் எந்த இடத்தில் சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தினை தேர்வு செய்யவும். பின்னர் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான குறிப்பிட்ட பகுதி வீடியோவானது இருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...