தேவையில்லாதவைகள் டிஸ்க்கில் சேருவதுபோல் ரிஜிஸ்டரில் சேரும் தேவையில்லாதவைகளை இந்த சின்ன சாப்ட்வேர் நீக்கிவிடுகின்றது.3 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Start Scan கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.இதில் உள்ள எரர் பைல்கள்உங்களுக்கு காண்பிக்கும். இதில் உள்ள ரிப்பேர்கிளிக செய்யவேண்டும்.
உங்களுக்கு ரிஜிஸ்டரி கிளினப் ரிப்போட் கிடைக்கும்.
நமது ரிஜிஸ்டரை பேக்கப் எடுக்கும் வசதியும் உள்ளது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
டிரையல் சாப்ட்வேர் ஆக உள்ளது. உங்களுக்கு பிடித்திருந்தால் இதனை நீங்கள் முழுபதிப்பையும் வாங்கிக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.