அடிக்கடி பயன்படுத்தும் முகவரிகள்.சொற்கள்.என அனைத்தையும் ரெடிமேடாக வைத்துக்கொண்டு தேவைப்படும் இடத்தில் அதைபயன்படுத்தினால் எவ்வளவு வசதியாக இருக்கும். அந்த வசதியை இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு தருகின்றது.24 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் டெக்ஸ்ட் என்னும் இடத்தில் உங்களுககு தேவையான டெக்ஸ்ட்டை தட்டச்சு செய்துகொள்ளவும். பிறகு இதில் உள்ள ஷார்ட்கட் கீகளை தேர்வு செய்து இறுதியாக Add கிளிக் செய்யவும். நீங்கள் :தேர்வு செய்த வார்த்தை மேலே உள்ள பெட்டிக்கு சென்று விடும். இதுபோல் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள்-முகவரிகள் அனைத்தையும் தட்டச்சு செய்து அதற்கான ஷார்ட்கட் வார்த்தைளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போழுது நீங்கள் உபயோகிக்க விரும்பும் எந்த அப்ளிகேஷன்கள் -இணையதளங்கள் -இ-மெயில் என எதைவேண்டுமானாலும் திறந்துகொள்ளுங்கள். தேவைப்படும் இடத்தில் இந்த ஷார்ட்கட் கீயை பயன்படுத்துங்கள். நேரம் -வேலை மிச்சமாவதை கண்கூடாக குறைவதை உணர்வீர்கள். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.