கம்யூட்டரில் தரையில் சண்டையிடுவதுபோல் இருந்தாலேமகிழ்ச்சியாக இருக்கும் இது ஆகாயத்தில் சண்டையிடுவதாக இருந்தால் குழந்தைகளுக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். வேற்று கிரகவாசிகளிடம் இருந்து நமது பூமியை நாம் காக்கவேண்டும்.துப்பாக்கி. பாம்.அணுகுண்டு என அனைத்தும் நமக்கு உடனுக்குடன் கிடைக்கும். 4 எம்பியில் அருமையான விளையாட்டினை கொடுத்துள்ளார்கள். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள டைமண்ட்களை நாம் சேகரித்துக்கொள்ளவேண்டும். நகர்நதுவரும் எதிரிகளை சுட்டுவீழ்த்தவேண்டும்.
நம் இருப்பிடம் தேடி பறந்துவரும் ஆயுதங்களை பிடித்து பயன்படுத்திடவேண்டும்.
விளையாட ஆரமபித்த சிறிது நேரத்திலேயே ஆர்வம் நம்மை தொற்றிக்கொள்ளுவதால் விளையாட நேரம் போவதே தெரிவதில்லை...
பயன்படுத்திப்பாருங்ககள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பின்குறிப்பு- நேற்று 3 டி கண்ணாடி பற்றிய பதிவினை பார்த்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். கண்ணாடியை தயார் செய்துகொள்ளுங்கள்.