இணையத்தில் -டெக்ஸ்டாப்பில் உள்ளதை நகலெடுக்க நாம் ஸகிரீன்பிரிண்ட் கீ யை உபயோகிப்போம். அதனை பின்னர் பெயிண்ட்டில் காப்பி செய்து பின்னர் வேண்டிய அளவிற்கு போட்டோஷாப்பிலோ -அலலது பெயிண்டிலோ ஆல்டர் செய்வோம். 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இநத சின்ன சாப்ட்வேர் நமக்கு பெரும்பாலான நேரத்தை சேமிக்கின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் https://getgreenshot.org/செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுடைய டாக்ஸ்பாரில இதனுடைய ஐ கான் வந்து அமர்ந்துகொள்ளும். இதனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதிலுள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் general - capture -output -destination -printer-plugins-expert என 7 விதமான செட்டிங்ஸ் டேப்புகள் இருக்கும்.நமக்கு நாம் எடுக்கும் புகைப்படம் எந்த பைல் பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டினை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.நேரடியாக பிரிண்ட் எடுக்கும வசதியும் இதில் உள்ளது.நாம் பகீ போர்டில் உள்ள பிரிண்ட் ஸ்கிரீன் கிளிக் செய்திட நமக்கு பச்சைநிற கட்டம் வரும் கர்சர் மூலம் படத்தினை நாம் தேர்வு செய்திட்ட பின் நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதிலிருந்தும் நாம் தேவையான வசதியினை பெறலாம்.
இதில் உள்ள Open in image editor கிளிக் செய்திட நமக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.இதில் வேண்டிய மாற்றங்ளையும் டெக்ஸ்டையும் நாம் எளிதில் சேர்க்கலாம்.
இதில் உள்ள effect கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் புகைப்படத்திற்கான பார்டெர் -ஷோடோ - டிசைன் எட்ஜ் மற்றும் கிரேஸ்கேல் இன்வர்ட் என எந்த எபெக்ட் வேண்டுமானாலும் கொண்டுவரலாம்.
டெக்ஸ்டாப்பிலிருந்தோ இணையத்திலிருந்தோ புகைப்படம் எடுத்து போடும் பிளாக் நண்பர்கள் இந்த சாப்ட்வேர் மூலம் தங்கள் பணியினை விரைந்து முடிக்கலாம். பயன்படுத்திப்பர்ருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.