Showing posts with label வேலன்..ஆல்பம்.புகைப்படம்.திருமணம்.பிறந்தநாள்.காதலர்தினம்..velan.album.design.photo.. Show all posts
Showing posts with label வேலன்..ஆல்பம்.புகைப்படம்.திருமணம்.பிறந்தநாள்.காதலர்தினம்..velan.album.design.photo.. Show all posts

வேலன்:-விதவிதமான போட்டோ ஆல்பம் நாமே உருவாக்க.

புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க போட்டோஷாப்பில் என்னற்ற PSD டிசைன் பைல்கள் உள்ளன.ஆனால் நமது விருப்பதற்கேற்ப - திருமணம்-பிறந்தநாள்-காலண்டர்-அன்னையர் தினம் - குழந்தைகள் தினம் - காதலர்தினம் என விருப்பத்திற்கேற்ப ஆலபம் தயாரிக்கலாம். 15 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உங்களுக்கு Scropbook.Greeting Card.Calendor.என எது நமக்கு தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளளலாம்.
Scrapbook ல் உப தலைப்புகளாகHoliday.Birthday.Family.baby.Kids.Wedding.விண்டோக்கள் இருக்கும். நமக்கு எது தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளலாம்.
தேர்வு செய்யப்பட்ட விண்டோவில் நமக்கு அதிக அளவு டிசைன்கள் இருக்கும். நமது டேஸ்ட்டுக்கு ஏற்றவாறு டிசைனை தேர்வு செய்து அதனை டவுண்லோடு  செய்துகொள்ளலாம்.
டிசைனை தேர்வு செய்தபின்னர் நாம் நமது விருப்பபடி நாம் புகைப்படங்களை தேர்வு செய்துகொள்ளலாம்.புகைப்படங்களை Autofill முறையிலும் தேர்வு செய்து கொள்ளலாம்.ஓவ்வொரு புத்தகத்திலும் ஐந்து டிசைன்கள் இருக்கும். தேவைப்பட்டால் நாம் டிசைன்களை அதிகப்படியாக சேர்த்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ஒவ்வொரு புகைப்படத்தையும் நாம் வேண்டிய டிசைனுக்குள் புகைப்படம் வருவதுபோல் செட் செய்துகொள்ளலாம் .கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அவர்கள் கொடுத்துள்ள டிசைன்கள் நமக்கு போதவில்லையென்றால் அதிகப்படியான டிசைன்களை நாம் இணைத்துக்கொள்ளலாம்.அழஅழகான பூங்கொத்துக்களை கொடுத்துள்ளார்கள். தேவையானதை தேவையான இடத்தில் இணைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்..
அதைப்போலவே ஒவ்வொரு புகைப்படத்திற்கும் நாம் கார்டூன் புகைப்படங்களை கொண்டுவரலாம்.கீழேஉள்ள விண்டோவில் பாருங்கள்.
சிம்பிளான -அழகான டிசைன் கீழே:-
நாம் உருவாக்கும் டிசைனை தனியோ சேமித்துவைத்துக்கொள்ளலாம்.பிரிண்ட் எடுக்கலாம்.மெயில் அனுப்பபலாம்.நாம் நம்மிடம் உள்ள புகைப்படங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தி ஆல்பமாக சேமித்துவைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பர்ருங்கள.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...