பிரிண்டருடன் சேர்த்து ஸ்கேனர் வாங்கினாலும் சரி - ஸ்கேனர் மட்டும் தனியாக வாங்கினாலும் சரி - அதனுடன் சாப்ட்வேர் கொடுப்பார்கள். சிலசமயம் அந்த ஸ்'கேனர் சாப்ட்வேர் சரியாக வேலை செய்திடாது. அவ்வாறான சமயங்களில் தனியாக ஸ்கேனர் சர்பட்வேர் வைத்து நாம் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்.10 எம்.பி.கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து நமக்கு ஸ்கேனிங் டாக்குமெண்ட எந்த பார்மெட்டில்வேண்டுமோ அந்த பார்மெட்டினையும்.தேர்வு செய்துகொள்ளலாம்.
இதில் ப்ரிவியூ பார்க்கும் வசதியையும் கொண்டுவரலாம். மேலும் நாம் ஸ்கேன் செய்த டாக்குமெண்டினை நேரடியாக பிடிஎப் பைலாகவும் டெக்ஸ்ட் பைலாகவும் சேமித்துவைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
பயன்படுத்த் எளிதாக உள்ளதால் அவசரத்திற்கு இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். இனி ப்ரிட்டருடன் வரும் ஸ்கேனர் சாப்ட்வேர் பழுதானாலும் இதன் மூலம் சரிசெய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன் .
வேலன்.