
இருப்பீர்கள். இது இணையத்தில் உள்ள 7 in 1
அலாரம்.இந்த மென்பொருளானது ஒரு
டெக்ஸ்டாப் டைம் பேக்கேஜ் ஆகும். இது
வேண்டிய நேரத்தில் வேண்டியவர்களின்
குரலில் நேரத்தை அறிவிக்கின்றது.
இதில் தனித்தனியே 7 வசதிகள்
உள்ளது. முதலில் இதை பதிவிறக்க
கணிணியில் இன்ஸ்டால் செய்யவும்.

நீங்கள் இந்த சாப்ட்வேரை திறந்ததும்
உங்களுக்கு மேலே உள்ள விண்டோ ஓப்பன்
ஆகும். இதில் முதலில் உள்ள து
Preference. இதை கிளிக் செய்ததும் உங்களுக்கு
கீழு் கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.

தேவையான விவரங்களை பதிவு செய்யுங்கள்.
அடுத்து உள்ளது Synchronise
உங்களுக்கு அப்போதைய நேரம் கிடைக்கும்.
அடுத்துள்ளது Stop Watch. அதன் படம் கீழே:-

நீங்கள் Start கிளிக் செய்தால் உங்களுக்கு
நேரம் ஓட ஆரம்பிக்கும்.அதை நீங்கள்
reset செய்து கொள்ளலாம்.
அடுத்துள்ளது Day & Night . இதில் நிழல்
உள்ள பகுதி இரவு என்றும் வெளிச்சம்
உள்ள பகுதி பகல் என்றும் எடுத்துக்கொள்ள
வேண்டும். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.
இதில் இந்தியாவில் பூனா வை தேர்வு
செய்துள்ளேன். அங்கு இப்போது இரவு
நேரம்.அங்கு வரும் சூரிய உதய நேரத்தையும்
சூரிய அஸ்தமன நேரத்தையும் கீழே உள்ள
கட்டத்தில் குறிக்கின்றது.

இப்போது இந்தியாவில் பகல்நேரமாக இருக்கும்
நேரத்தில் மற்ற தேசங்களில் எங்கெல்லாம்
இரவாக இருக்கும் என்றும் சுலபமாக அறிந்து
கொள்ளலாம். அதுமட்டும் அல்லாது அங்கு
குறிப்பிட்ட இடத்தை நமது மவுஸால் தேர்வு
செய்தால் அந்த இடத்தில் அடுத்த சூரிய உதய
நேரம் மற்றும் சூரிய அஸ்தமன நேரத்தை
சுலபமாக காணலாம். உங்கள் நண்பர்
வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால்
அங்கு இரவா - பகலா என சுலபமாக அறியலாம்.

அடுத்து வருவது உலக நேரம் . இதை தேர்வு
செய்ய கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள தேசங்களை வரிசைப்படியோ -
நகரங்கள் வரிசைப்படியோ - நேர வரிசைப்
படியோ தேர்வு செய்யலாம். அதை தேர்வு
செய்து ஓகே கொடுத்தால் உங்களது விண்டோவில்
அந்த தேசம் சேர்ந்துவிடும். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.

அடுத்துள்ளது காலண்டர். அதை யும் நீங்கள்
செட் செய்யலாம்.

அடுத்துள்ளது அலாரம். இதை நீங்கள் தேர்வு
செய்து Add கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்
கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதன் வலப்புறம் மேலே பார்த்தால் உங்களுக்கு
Speak On Alarm Trigger இருக்கும் . அதில் உள்ள
say time only, say date only, say time and date only
என விரும்பியதை தேர்வு செய்யலாம். கீழே
உள்ள படத்தை பாருங்கள்.

தேவையானதை தேர்ந்தேடுங்கள்.
அதைப்போலவே Standard sound -ல்
அவர்கள் பதிவு செய்து வைத்துள்ள ஒலியை
செட் செய்யலாம்.

அதன் கீழே Custom Sound தேர்வு செய்தால் நமது
கணிணியில் உள்ள நமது விருப்ப பாடலை
ஒலி பரப்பலாம்.
இதில் உள்ள அலாரத்தில் சிறப்பு என்ன
வென்றால் நமது விருப்ப படத்தை அலாரம்
அடிக்கும் சமயம் கொண்டு வரலாம்.
இதில் உள்ள Display Picture on alarm tirgger
எதிரில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு
செய்யவும். உங்கள் விருப்பமான படத்தை
உங்கள் கணிணியில் இருந்து தேர்வு
செய்யுங்கள். அலுவலகத்தில் புதிதாக
திருமணமானவர்கள் தனது மனைவின்
படத்தை அலாரத்தில் வரும் படமாக
செட் செய்யலாம். அலுவலக நேரம் முடியும்
நேரம் மனைவியின் படம் வந்து நினைவு
படுத்தும். அதைப்போல் திருமணமாகி
சில மாதங்கள் ஆகியிருந்தாலும் மனைவியின்
படத்தை அதைப்போலவே செட் செய்யலாம்.
வீடுக்கு செல்லும் நினைவே வராமல்
ஆபிஸில் தொடர்ந்து வேலை பார்த்துக்கொண்டே
இருக்கலாம்.(கோபப்பட வேண்டாம் -
இதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளவும்)
அலாரத்தில் நான் செட் செய்த எனது படம் கீழே:-

படம் தேர்வு செய்து விட்டீர்களா...இனி
வலப்புறம் பாருங்கள்.Frequency யில் உள்ள
கட்டத்தில் தேவையானதை தேர்ந்தேடுங்கள்.

அலாரத்தையும் நேரத்தையும் தேர்வு
செய்யுங்கள்.இறுதியாக ஓ,கே. கொடுங்கள்.
இறுதியாக உள்ள Speak தேர்வு செய்யுங்கள்.
உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.

உங்களுக்கு தேவையான பெயரை தட்டச்சு செய்து
ஓ,கே. கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள Start பட்டனை கிளிக் செய்தால்
உங்களுக்கு கீழு் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள Record பட்டனை அழுத்தி உங்களிடம்
உள்ள மைக் மூலம் படத்தில் வரும் சொற்களை
படித்து உங்கள் குரலில் பதிவு செய்யவும்.
உங்கள் குழந்தைகளின் குரலிலும் பதிவு
செய்யலாம். இறுதியாக ஓ.கே. கொடுங்கள்.
குறிப்பிட்ட நேரம் வந்ததும் படம் கணிணியில்
வந்த அப்போதைய நேரத்தை உங்களுக்கு
சொல்லும்.
பதிவை பாருங்கள். பிடித்திருந்தால்
மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.