Showing posts with label children.வேலன்.விண்டோஸ் எக்ஸ்பி.. Show all posts
Showing posts with label children.வேலன்.விண்டோஸ் எக்ஸ்பி.. Show all posts

வேலன்-கம்யூட்டரில் உபயோகிக்கும் நேரத்தை செட்செய்ய

குழந்தைகள் ஆசைப்படுகின்றது என்று கம்யூ்ட்டர் வாங்கி கொடுத்துவிடுவோம். ஆரம்பத்தில் ஆசை தீர விளையாடுவார்கள் விடுமுறை நாட்களில் விளையாடினால் சரி....ஆனால் பள்ளி செல்லும் நாட்களில் பாடங்கள் படிக்காமல் கம்யூட்டரிலேயே விளையாடிகொண்டிருந்தால் படிப்பு என்ன ஆவது? நாம் வீட்டில இருந்தால் அவர்களை கட்டுப்படுத்தலாம். ஆனால் வேலை விஷயமாக வெளியில் செல்லும் சமயம் குழந்தைகள் படிக்கின்றார்களா ? கம்யூ்ட்டரில் விளையாடுகின்றாரகளா ? என நமக்கு தெரியாது. அவர்கள் பள்ளியில் இருந்து வந்ததும் அரை மணி நேரமோ - அல்லது ஒரு மணி நேரமோ கம்யூ்ட்டரில் விளையாடும் மாறு நேரம் செட்செய்துவிடலாம். குறிப்பிட்ட நேரம் விளையாடி முடித்ததும கம்யூ்ட்டர் ஆப் ஆகிவிடும்.3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன ஆகும்.
இதில் உள்ள டைம் செட்யூல் கிளிக் செய்ய டைம் விண்டோ ஓப்பன ஆகும். இதில் அப்போதைய நேரம் டைம் டெபிளில் தெரியும்.
நேரம் செட் செய்ததும் அந்த இடம் சிகப்பு மார்க்குடன் அமைந்துவிடும்.
மொத்தம் செட்செய்த நேரத்தை அதில் உள்ள யூசர் டைம் இன்போ வில் அறிந்துகொள்ளலாம்.
தேவையான போல்டர்களையும மறைத்து வைக்கலாம். 
குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் ஏதும் இலலையென்றால் கூடுதலாக உபயோகிக்கும் நேரத்தை கூட்டிககொள்ளலாம்.
கீழ்கண்ட விண்டோவில் உங்களுக்கு எளிதில் புரியும்.
அதிகரிக்கும் நேரத்தையும் எளிதில் செட்செய்துகொள்ளலாம்.
தேவையை பொருத்து டைம் செட் செய்து கொள்ளலாம்.மொத்தமாக ஒரு வாரத்திற்கான டைமும் செட்செய்துகொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...