Showing posts with label english.velan.english dictionary.free software.oxford.oxford dictionary.game.kids game.. Show all posts
Showing posts with label english.velan.english dictionary.free software.oxford.oxford dictionary.game.kids game.. Show all posts

வேலன்-ஆங்கில டிக்ஷனரியும் - அறிவு விருத்தியும்.

தமிழ்க்கு கோனார் உரை - மேப்பிற்கு அட்லாஸ் - வரிசையில் ஆங்கில டிக்ஷ்னரி என்றாலே ஆக்ஸ்போர்ட் தான். இன்று ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியை பார்கக்லாம். 7 எம.பி. கொள்ளளவு கொண்ட டிக்ஷனரியின் உடன் அறிவு வளர்ச்சிக்கென ஆங்கில வார்த்தை அறிந்துகொள்ளும் விளையாட்டும்இதில் உள்ளது இதன் விஷேஷம். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். 
இதில் உள்ள சர்ச் காலத்தில் தேவையான வார்த்தையை கொடுத்தால் அதற்கான விளக்கம் கிடைக்கும். சாதாரண டிக்ஷரிதானே இது என நீங்கள் கேட்பது புரிகின்றது. இதிலேயே அறிவு வளர்ச்சிக்கான விளையாட்டும் இணைந்துள்ளது.இதில் மேல்புறம் உள்ள கேம் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.அதில் உள்ள ஆக்டிவிட்டி கிளிக் செய்ய 4 விதமாக நமக்கு கிடைக்கும்.
Baffle என்பதில் 16 எழுத்துக்களுடன் கட்டம் கிடைக்கும். அதில் தேவையான வார்த்தையை நாம் தேர்வு செய்யவேண்டும்.எவ்வளவு வார்த்தைகளை எவ்வளவு நேரத்திற்குள் தேர்வு செய்கின்றமோ அதற்கு ஏற்ப நமக்கு ஸ்கோர் கிடைக்கும்.
இதைப்போலவே Scramble.வரும் எழுத்துக்களுக்கு ஏற்ப வார்த்தையை தேர்வு செய்யவேண்டும்.
கீழே உள்ள விண்டோவில் உங்களுக்கு எளிதில் புரியும் என நினைக்கின்றேன்.
இதைப்போலவே Conundrum என்பதிலும் தேவையான வார்த்தையை தேர்வு செய்யவேண்டும்.
கொஞ்சம் அதிக அளவு ஆங்கில அறிவு தேவைப்படுவதால் நம்மைவிட நமது குழந்தைகள் எளிதில் இதற்கு விடைகண்டு விளையாடுவார்கள்.நீங்களும் விளையாடுங்கள். புதுபுது வார்த்தைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
பதிவுகளை பாருங்கள். கரு்த்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...