Showing posts with label gmail help. Show all posts
Showing posts with label gmail help. Show all posts

வேலன்-ஜி-மெயிலில் பர்சனல் தகவலை தனியே சேமிக்க

ஜி-மெயில் உபயோகிக்காமல் இருக்க மாட்டோம். நல்ல தகவல்கள் முதற்கொண்டு வேண்டாத விளம்பரம் வரை நமக்கு மெயில் வந்துகொண்டே இருக்கும். மெயில் சேர்ந்ததும் அதை மொத்தமாக டெலிட் செய்துவிடுவோம். முக்கியமான தகவலும் டெலிட்செய்ததை அறிந்து பிறகு அதை தேடி எடுத்துவந்து வைப்போம். ஆனால் முக்கியதகவலை படிக்கும்போதே நமது பர்சனல் போல்டரில் போட்டுவைத்தால் பின்னர் தேடிஎடுக்க சுலபமாக இருக்கும்.இதர கடிதங்களை டெலிட் செய்தாலும் கவலைஇல்லை. இனி நமக்கு வரும் மெயிலை எப்படி பர்சனல் பாக்ஸில சேமிப்பது என்று பார்க்கலாம்.ஜி -மெயிலை திறந்துகொள்ளுங்கள். கீழ்கண்ட விண்டோ வரும்.
இதில் தேவையான கடிதத்தின் எதிரில் உள்ள கட்டத்தை தேர்வு செய்தபின் மேலே பார்த்தீர்களேயானால் உங்களுக்கு Archive.Reportspam.Delete.Move To என்கின்ற டேபுகள் இருக்கும். அதில் உள்ள Move To கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே பாக்ஸ் ஒன்று வரும். அதில் உள்ள Personal என்பதனை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான். உங்கள் தகவல் Inbox ல் மறைந்து Personal பாக்ஸில் இருக்கும். Personal பாக்ஸில் தகவலை பெற Composs Mail கீழே உள்ள 
Personal கிளிக் செய்யவும். உங்கள் தகவல் அங்கு இருக்கும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
கடிதம் வரும்போதே அதை படித்துபார்த்து முக்கியமாக இருந்தால் மறக்காமல் அதை பர்சனல் பாக்ஸில் போட்டுவைத்துவிட்டால் மீண்டும் உபயோகிக்க சுலபமாக இருக்கும்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
சின்ன பதிவாக இருப்பதால் இணைப்பாக ஒரு படம் கீழே-
JUST FOR JOLLY PHOTOS:-

நீ பாடடு வாசிக்காமல் இருந்தால் உனக்கு காசு தருகின்றேன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...