இன்று 1 கிராம் தங்கம் விலை தோராயமாக ரூபாய் 1800 -க்கு விற்கினறது. ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கம் போட்டு அழகுபார்க்க முடியுமா? அதனால் நாம் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் சுமார் 100 சவரன் தங்க நகை களை தரலாம் என்று உள்ளேன். 20 செட் தங்க நகைகளை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
போட்டோஷாப்பில் இந்த PSD பைலை ஒப்பன் செய்து கொள்ளுங்கள்.நீங்கள் நகை போட்டு அழகு பார்க்க தேவையான படத்தை தேர்ந்தெடுங்கள். நான் கீழே
சசிகுமார்-அனன்யா அவர்களின் படத்தை தேர்வு செய்துள்ளேன்.
நெக்லஸ் மாடலில உங்களுக்கு எது பிடித்துள்ளதோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். பின்னர் படத்தில் அந்த நகையை இழுத்துவந்து விடுங்கள். பின்னர் Ctrl+T மூலம் நகையை தேவையான அளவு மாற்றி குறைத்துக்கொள்ளுங்கள்.கழுத்தில தேவையான இடத்தில் மூவ் டூல் மூலம் நகர்த்தி வைத்துவிடுங்கள்.நான் இவ்வாறு நகை டிசைன் செய்தபின் வந்துள்ள புகைப்படம் கீழே-
நமது வாசகர்களுக்கு ஏற்கனவே PSD பைலை எப்படி பயன்படுத்துவது என்று போட்டோஷாப் பாடத்தில் பதிவிட்டுள்ளேன். முந்தைய பாடததை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பதிவினை பாருங்கள். கருததினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பின்குறிப்பு-நாளை ஞாயிறு கடை உண்டு.மறக்காமல் வந்து விடுங்கள்.