Showing posts with label malware.velan.tamilish.virus.blogger .blogger tips.windows xp.. Show all posts
Showing posts with label malware.velan.tamilish.virus.blogger .blogger tips.windows xp.. Show all posts

வேலன்-மால்வேரிலிருந்து பதிவை காப்பாற்றுங்கள்.ஓர் எச்சரிக்கை.

இன்று மாலை எனது வலைதளத்தை velang.blogspot.com திறக்கையில் உங்கள் தளம் Malware Detected என்று வந்தது. அடடா...வடை போச்சா...என திகைத்துவிட்டேன்.நண்பர்களிடம் விசாரித்தபோது பதற்றம் வேண்டாம் ...நிறைய பதிவர்களின் பிளாக்குகள் இதுபோல் Malware Detected வந்துள்ளதாக சென்னார்கள்.கொஞசம் ரிலாக்ஸ் செய்து கொண்டேன்.என்னுடைய பிளாக் திறந்தபோது வந்த தளம் கீழே பார்க்கவும்.

இதற்கான காரணமாக தமிழ்10 தளம் என அறிந்தேன்.தமிழ்10 தள ஒட்டுப்பட்டைகளை யார் யார் இணைத்துள்ளார்களோ அவர்களுக்குதான் இநத மாதிரி மெசெஜ் வருவதாக அறிந்துகொண்டேன்.ஆபத்து சமயத்தில் அருமை நண்பர் திரு. A.G.E.வெங்கடேஷ் அவர்கள் உதவிக்கு வந்தார்கள். அவரின் உதவியுடன நான் சேர்த்த தமிழ்10 தள கோடிங்கை எனது விட்ஜெட்டிலிருந்து நீக்கி விட்டு ஒப்பன் செய்தேன் சரியாக வந்தது. நீங்களும் உங்கள் தளம் இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் இவ்வாறு செய்து மால்வேரிலிருந்து உங்கள் தளத்தை காப்பாற்றுங்கள்.தமிழ்10 மேல் எனக்கு எந்த கோபமோ - வெறுப்போ இல்லை..
வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு-சக பதிவர்களுக்கு பயன்படட்டும் என இதனை பதிவிடுகின்றேன்.நாளை காலை (27.09.2010)வழக்கமான பதிவும் வெ ளிவரும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...